மேஷம்:
வணிகம் சார்ந்த விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நீங்கள் தெளிவான சிந்தனையுடன் செயல்பட வேண்டும். பல பிரச்சினைகளுக்கு மிக எளிமையாகவும், விரைவாகவும் தீர்வு காண்பீட்கள். உயரத்திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
பரிகாரம் - சிவனுக்கு நீர் படையல் வைக்கவும்.
ரிஷபம்:
நிதி சார்ந்த விஷயங்களில் இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். வணிக விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். வருமான ஆதாரங்களை திரட்டுவதன் மூலமாக நிதிநிலையை பலப்படுத்திக் கொள்ளலாம். பணியிடத்தில் திருட்டு நடைபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பரிகாரம் - பைரவர் கோவிலில் தேங்காய் உடைக்கவும்.
மிதுனம்:
நிதி ரீதியாக இன்றைய நாள் உங்களுக்கு சுமூகமானதாக இருக்காது. பணம் சார்ந்த விஷயங்களில் பிரச்சினைகள் உண்டாகலாம். திடீர் தேவைகளுக்காக கடன் பெற வேண்டியிருக்கலாம். அலுவலகத்தில் மோசடி நடக்க வாய்ப்பு உண்டு. ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக கவனமுடன் படிக்கவும்.
பரிகாரம் - சூரியனுக்கு நீர் படையல் வைக்கவும்.
கடகம்:
பொருளாதார சூழல் மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நிலுவையில் உள்ள பணிகள் குறித்து கவலைகள் எழும். ஆனால், உரிய நேரத்தில் அவற்றை செய்து முடிப்பீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்க்கும் பணவரவு கைக்கு வரும். அந்தப் பணத்தை வீட்டு செலவுகளில் முடக்காமல் சரியான வகையில் முதலீடு செய்யவும்.
பரிகாரம் - பசுவுக்கு பசும்புல் வைக்கவும்.
சிம்மம்:
நல்ல காலம் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பணியிடத்தில் பணி உயர்வு கிடைக்கலாம். பலன் இல்லாத வேலைகளில் நேர விரயம் செய்ய வேண்டாம். செலவுகளை செய்யும் முன்பு பலமுறை யோசிக்கவும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நீங்கள் வருத்தம் அடைய நேரிடலாம். சேமிக்க முயற்சிக்கவும்.
பரிகாரம் - மஞ்சள் நிற சமையல் பொருள் தானம் செய்யவும்.
கன்னி:
உடல் ரீதியிலான பிரச்சினைகள் காரணமாக அலுவலகப் பணிகள் பாதிக்கப்படலாம். இதனால், அதிகாரிகள் மத்தியில் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். பொருளாதார சூழல் மேம்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. திடீர் பண லாபம் எதிர்பார்க்கலாம். யாரையும் கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டாம்.
பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் வழங்கவும்.
துலாம்:
பணியிடத்தில் மிகுந்த கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். இதற்கான நற்பலன் எதிர்காலத்தில் கிடைக்கும். நீண்ட கால நோய்களில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியம் மேம்பட வாய்ப்பு உள்ளது. உங்களை பற்றிய சர்ச்சை மிக தீவிரமானதாக மாறக் கூடும். ஆகவே எச்சரிக்கை தேவை.
பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.
தனுசு:
வணிகம் சார்ந்த நடவடிக்கைகளில் லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணம் கிடைப்பது குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற வேலைகளில் நேர விரயம் செய்ய வேண்டாம். ஒரே சமயத்தில் இரண்டு பணிகளில் கவனம் செலுத்த வேண்டாம். குடும்பத்தில் கொண்டாட்ட சூழல் நீடிக்கும்.
பரிகாரம் - வீட்டை விட்டு செல்லும் முன்பாக பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறவும்.
மகரம்:
சிறு வணிகர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். அதே சமயம், வேலையில் உள்ள நபர்களுக்கு இன்றைய நாள் சாதகமானதாக அமையாது. நிதி சார்ந்த இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமுடன் இருக்கவும். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை கடைபிடிக்கவும். கடன் கொடுக்கும்போது கவனம் தேவை.
பரிகாரம் - ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.