மேஷம்:
உங்கள் உடல் நலத்திற்கும் வசதியான வாழ்க்கைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உயர் அதிகாரிகளிடமிருந்து உதவிகள் கிடைக்கும். நீங்கள் திட்டிய திட்டங்களின் படி செயல்படுவீர்கள். வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் நன்றாக இருக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்
கடகம்:
உங்கள் குறிக்கோளை நோக்கி செயல்படுவது மிகவும் நல்லது. சுற்றியுள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. பொருளாதார நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும் நாள்.
பரிகாரம்: சிவப்பு நிற உடையை துர்கா தேவிக்கு வைத்து வழிபட வேண்டும்.
சிம்மம்:
வேலை சம்பந்தப்பட்ட விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. தொழிலதிபர் ஒருவரின் நம்பிக்கையை பெறுவீர்கள். கடல் கடந்த தேசங்களில் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஈடுபடுபவர்கள். பொறுமையை கையாள்வது நல்லது.
பரிகாரம்: சிறிய பெண் குழந்தைகளுக்கு பாயாசத்தை உணவளிக்க வேண்டும்.
துலாம்:
தொழில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபடுவீர்கள். புதிய சாதனைகளை செய்வீர்கள். நேரத்திற்கு வேலைகளை செய்து முடிப்பது வெற்றியை கொடுக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள். அலுவலகத்தில் வசதிகள் அதிகரிக்கும். கடும் உழைப்பின் மூலம் தொழில் விரிவாக்கம் மற்றும் லாபத்தை அதிகரிக்க முடியும்.
பரிகாரம்: அதிகாலையில் எழுந்து சூரியனுக்கு நீர் காணிக்கை அளிக்க வேண்டும்.
விருச்சிகம்:
தொழில் மற்றும் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு கிடைக்கும். நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திறமை அதிகரிக்கும். வெற்றிகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல நிலையை அடைவீர்கள்.
பரிகாரம்: லக்ஷ்மி தேவிக்கு தாமரை மலரை வைத்து வழிபட வேண்டும்.
தனுசு:
விதிமுறைகளை கடைபிடித்து நடப்பது வெற்றியை கொடுக்கும். அனைவரின் ஒத்துழைப்பினாலும் வாழ்வில் முன்னேற்றத்தை பெறுவீர்கள். ஒழுக்கத்தை கடைபிடிப்பது நல்லது. பொறுமையுடன் செயல்பட வேண்டும். வெளி ஆட்களிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பது நல்லது.
பரிகாரம்: கருப்பு நாய்க்கு இனிப்பு வகைகளை உணவளிக்க வேண்டும்.
கும்பம்:
அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு கிடைக்கும். வெற்றியை ஈட்டுவீர்கள். விதிமுறைகளை கடைபிடித்து நடப்பது நல்லது. பேராசையை தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் மற்றவரின் ஒத்துழைப்பும் இருக்கும்.
பரிகாரம்: இனிப்புடன் மாவை கலந்து எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.