மேஷம்:
இன்று நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்டிருந்த மன உளைச்சல் இன்று நீங்கும். உங்களது நெருங்கிய நண்பரின் வழிகாட்டுதலை நீங்கள் பெறலாம், இதனால் நீங்கள் நேர்மறை ஆற்றலை பெறுவீர்கள். பணவரவு சுமாராக இருக்கும்.
பரிகாரம் - பசு மாடுகளுக்கு உணவாக பச்சை புல் அல்லது கீரையை கொடுங்கள்
ரிஷபம்:
முக்கியமான விஷயங்களில் நீங்கள் இன்று காணும் மாற்றங்களால் எல்லாம் முடிந்துவிட்டது போல விரக்தியாக உணர்வீர்கள். இதுநாள் வரை சீராக சென்று கொண்டிருந்த முக்கியமான விஷயம் ஒன்றை நீங்கள் மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்க வேண்டியிருக்கும். எந்த இடத்தில் தவறு நடந்தது என்பதை ஆராய வேண்டும்.
பரிகாரம் - துர்க்கை அம்மன் கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்
மிதுனம்:
இன்று புதிய முயற்சிகள் மேற்கொண்டால் வெற்றி பெறுவீர்கள், ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மனதில் கொள்ளுங்கள். முயற்சியால் சூழ்நிலையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை புரிந்து கொள்வீர்கள். கடின உழைப்புக்கு உரிய பலன் இன்று கிடைக்கும்.
பரிகாரம் - ஒரு ஏழை நபருக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்
கடகம்:
இன்று நீங்கள் உங்களை சுற்றியுள்ள உறவுகள் மற்றும் விஷயங்களில் மிகவும் ஈடுபாடு காட்டுவீர்கள். பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக இன்று உங்களுக்கு சில எதிர்மறை எண்ணங்கள் தோன்ற கூடும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்களே மன அழுத்தத்தை உருவாக்கி கொள்வீர்கள். எனவே ரிலாக்ஸாக இருக்க முயற்சிக்கவும்.
பரிகாரம் - பறவைகளுக்கு உணவளிக்கவும்
சிம்மம்:
இன்று உங்களை சுற்றி ஒருவித குழப்பம் இருக்கும், அதனால் நீங்கள் கோபப்படுவீர்கள். எனவே நாளை அமைதியாக கடத்த மனதை அமைதியாக வைத்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள். இன்று முக்கிய வேலை இருந்தால் தள்ளிப் போடுங்கள். உங்கள் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், சிறிய பிரச்சனைகளை கூட இன்று பெரிய பிரச்சனையாக பார்ப்பீர்கள்.
பரிகாரம் - தெரு நாய்களுக்கு உணவளிக்கவும்
கன்னி:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக உள்ளது, ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள், குடும்பத்திலும் சமூகத்திலும் நீங்கள் மரியாதை பெறுவீர்கள். இன்று உங்களது வாழ்க்கை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் சமநிலையை உணர்வீர்கள். இன்று நீங்கள் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே செலவு செய்வது என தீர்மானித்து கொள்ளுங்கள்.
பரிகாரம் - மாற்றுத்திறனாளி நபர்களுக்கு உதவி செய்யவும்
துலாம்:
உங்கள் மனதில் அமைதி இருக்காது மற்றும் உணர்ச்சிகரமான எண்ணங்கள் இன்று உங்களை சூழ்ந்திருக்கும். ஆனாலும் எதிர்மறை எண்ணங்களில் இருந்து உங்களை தற்காத்து கொள்ளுங்கள். உறவுகளில் தவறான புரிதல் ஏற்படலாம். உங்கள் முடிவை பிறரிடம் சொல்வது இந்து உங்களுக்கு கடினமாக இருக்கும்.
பரிகாரம்: எறும்புக்கு வைக்கும் மாவில் சர்க்கரை கலக்கவும்
விருச்சிகம்:
மரபுக்கு அப்பாற்பட்டு இன்று சில விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்படலாம். அந்த முடிவும் உந்காலது சொந்த வாழ்க்கையின் பாதையை தீர்மானிப்பதாக இருக்கலாம். இதுநாள் வரை முடிவெடுக்க முடியாமல் திணறிய விஷயங்களில் இன்று உங்களுக்கு தெளிவு ஏற்படும்.
பரிகாரம்: அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்
கும்பம்:
இன்று நீங்கள் புதிய உற்சாகம் மற்றும் உத்வேகம் பெறுவீர்கள். உங்களது மனம் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவதற்கு ஏற்ற நாள். இன்று நீங்கள் தொடங்கும் எந்த ஒரு புதிய வேலையும் சிறப்பாக இருக்கும் மற்றும் உங்கள் வாழ்விற்கு ஒரு புதிய திசை கிடைக்கும்.
பரிகாரம் - ராமர் கோவிலில் கொடியை காணிக்கையாக சமர்பிக்கவும்