மேஷம்:
எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள்களாக இழுத்தடிக்கப்பட்ட பணத்தை எளிதில் திரும்பப் பெற முடியும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, ஹனுமான் மந்திரத்தை உச்சரிக்கவும்.
ரிஷபம்:
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியைப் பெறுவீர்கள். இருந்தப் போதும் இன்றைக்கு ஒன்றன் பின் ஒன்றாக புதிய பிரச்சனைகள் ஏற்படும். பொருளாதார நிலையில் மோசமான சூழல் ஏற்படும். செலவழிப்பதற்கு முன்னதாக கவனமாக சிந்தித்து செயல்படாவிட்டால், எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும் நாளாக அமையும்.
பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராமரக்ஷஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும்.
மிதுனம்:
இன்றைக்கு வியாபார பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். சிறு வணிகர்களுக்கு சிறப்பான நாளாக அமைவதோடு சலுகைகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இல்லை. பண இழப்பு ஏற்படலாம். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுங்கள். யாருக்கும் கவனமுடன் கடன் கொடுங்கள்.இல்லையென்றால் வீண் பிரச்சனைகளில் சிக்க நேரிடும்.
பரிகாரம்: ஓம் நம சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
கடகம்:
இன்றைக்குத் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் விவாதங்கள் தோன்றி மறையும். வீண் வேலைகளில் நேரத்தை வீணாக்காதீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். குடும்பத்தில் கொண்டாட்டமான சூழல் நிலவும்.
பரிகாரம்: பெரியவர்களின் ஆசிர்வாதம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவும்.
சிம்மம்:
இன்றைக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும், வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும். வீண் வேலைகளில் நேரத்தை செலவழிக்காதீர்கள். உங்களுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பணத்தை செலவழிப்பதற்கு முன்னதாக யோசித்து செயல்படவும். இல்லையென்றால் எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். எனவே சேமிப்பில் கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: ஏழைகளுக்குப் பொருள்களைத் தானம் செய்யுங்கள்.
கன்னி:
உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ரீதியான பிரச்சனைகளால் அலுவகத்தில் பணிகள் பாதிக்கப்படலாம். உத்தியோகஸ்தர்களின் பார்வையில் உங்களின் இமேஜ் கெட்டுவிடும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. திடீர் பண ஆதாயம் உருவாகும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் அர்ச்சனை
துலாம்:
மனதில் நினைத்த காரியங்களை இன்று செய்து முடிப்பீர்கள். எதிர்ப்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்பு உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடும் சூழல் ஏற்படும். சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும்.. உத்தியோக பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும்.
பரிகாரம்: அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும்.
விருச்சிகம்:
வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உங்களது கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாமல் பேரம் பேச வேண்டாம். பழைய நண்பர்களின் சந்திப்பு இன்று ஏற்படும். திருமண வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.
பரிகாரம்: சிவபெருமானுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவும்.
தனுசு:
பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே நின்று போன வேலைகளைப் பற்றி கவலை இருந்தாலும், காலப்போக்கில் வேலை செய்யத் தொடங்குவீர்கள். நீண்ட நாள்களாக இருந்த பணம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒருவேளை உங்களுக்குப் பணம் கிடைத்தால், தேவையில்லாத வீட்டு செலவுகளுக்குப் பயன்படுத்தாமல், சரியான ஆலோசனைக்குப் பிறகு முதலீடு செய்தால், எதிர்காலத்தில் பெரிய லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுக்கவும்.
மகரம்:
இன்றைக்கு நிதி ரீதியாக சிறப்பாக நாளாக உள்ளது. பணம் தொடர்பான விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். தீடீரென வரக்கூடிய வேலைகளைச் செய்வதற்கு நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். பணியிடத்தில் மோசடி நடக்க வாய்ப்புள்ளது. எந்த ஆவணத்திலும் கையெழுத்திடும் முன்னதாக கவனமுடன் செயல்படவும்.
பரிகாரம்: சூரியனுக்கு தண்ணீரில் அர்ச்சனை செய்யவும்.
கும்பம்:
நிதி விஷயங்களில் அதிர்ஷ்டத்தை அளிக்கும் நாளாக இன்று அமையும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்து எதிர்காலம் தொடர்பாக சிந்தனையை அதிகரிக்கவும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். பணியிடத்தில் திருட்டு நடக்க வாய்ப்புள்ளதால், கவனமுடன் இருக்கவம். ஆன்லைன் மோசடிக்கு நீங்கள் பலியாக நேரிடும்.
பரிகாரம்: பைரவர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபடவும்.
மீனம்:
இன்றைக்கு தடைகள் விலகும் நாளாக அமையும். வியாபார விஷயங்களில் முடிவுகள் எடுக்கும் போது தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டாலே, பல சிக்கல்களை எளிதாகவும், வேகமாகவும் தீர்க்கும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாழ்வில் உச்சத்தை அடைய வேண்டும் என்றால், பல முயற்சிகளை நீங்கள் செய்யுங்கள். வீண் வேலைகளில் நேரத்தை வீணாக்காதீர்கள். இதன் மூலம் பண நஷ்டம் ஏற்படுவதோடு வரும் வாய்ப்புகளையும் நீங்கள் இழக்க நேரிடும்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு தண்ணீர் அபிஷேசகம் செய்யவும்.