ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (டிசம்பர் 22) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  மேஷம்:
  பணியிடம் அல்லது வியாபாரத்தில் இன்று புதிய செயல்களை தொடங்க வேண்டாம். ஏனென்றால் இன்று நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்காது. ரியல் எஸ்டேட், கமிஷன், துணி போன்றவை தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு இன்று லாபம் அதிகரிக்கும்.
  பரிகாரம்: ஹனுமானுக்கு குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்

  MORE
  GALLERIES

 • 212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  ரிஷபம்:
  தொழில் சார்ந்த பணிகள் இன்று தடையின்றி நிறைவேறும். இன்று நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகளும் நேர்மறை பலன்களை தரும். நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். வெளிநாடு தொடர்பான வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  பரிகாரம்: பணியிடத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்தி திறமையை நிரூபிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 312

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  மிதுனம்:
  நீங்கள் நினைக்கும் சுபகாரியங்கள் இன்று நிறைவேறும், இதனால் மனஅமைதி ஏற்படும். இன்று உங்களுக்கு நாள் சாதகமாக உள்ளது. வியாபாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலைகள் இன்று வேகமடையும். வங்கி, வழக்கறிஞர், ஆடிட்டிங் போன்ற தொழில் செய்வோருக்கு இன்றைய நாள் சாதகமானது.
  பரிகாரம்: சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்யவும்

  MORE
  GALLERIES

 • 412

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  கடகம்:
  சொத்து அல்லது பங்குகளில் முதலீடு செய்ய, வணிகம் தொடர்பான பணிகளை திட்டமிட இன்று சாதகமான நாள். இலக்கியம், கலை தொடர்பான வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். அனுபவம் வாய்ந்த நபர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு தேவைப்படும். கடின உழைப்பின் முழு பலன் இன்று கிடைக்கும்.
  பரிகாரம்: விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைக்கவும்

  MORE
  GALLERIES

 • 512

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  சிம்மம்:
  வணிகத்தில் இன்று சில ரிஸ்க்குகளை துணிந்து எடுப்பது நன்மைகளை தரும். எதிராளிகள் என்ன செய்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டாம். வியாபாரத்தை மேம்படுத்துவது தொடர்பான எந்த திட்டமும் இன்று முன்னெடுக்கப்படலாம். பணியிடத்தில் முக்கிய பொறுப்பு உங்களுக்கு கொடுக்கப்படலாம்.
  பரிகாரம்: விஷ்ணு பெருமானை வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 612

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  கன்னி:
  வியாபாரிகளுக்கு இன்று தொழில் நிலை மேம்படும். கொடுக்கப்படும் புதிய பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய நபர்களின் தொடர்புகள் வணிக ரீதியாக மிக சாதகமாக இருக்கும்.
  பரிகாரம்: இன்று ஹனுமானை வழிபடுங்கள்

  MORE
  GALLERIES

 • 712

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  துலாம்:
  வியாபாரிகள் தொழில் வளர்ச்சிக்காக இன்று சில உறுதியான மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். புதிய தொழில் தொடர்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுக்கு வேலைகளில் ஏற்படும் பிரச்சனைகள் உங்கள் சீனியர்களின் உதவியுடன் தீர்க்கப்படும்.
  பரிகாரம்: நாள் சிறப்பாக இருக்க காலை யோகா பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்

  MORE
  GALLERIES

 • 812

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  விருச்சிகம்:
  வியாபாரிகள் இன்று சிறப்பான ஆர்டர்களை பெறுவார்கள். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பேமென்ட் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். இன்று நிதி மற்றும் பார்ட்னர்ஷிப் தொடர்பான வியாபாரத்தில் லாபம் நிறைய இருக்கும். அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு பிரச்சனைகள் வரலாம் என்பதால் கவனம் தேவை.
  பரிகாரம்: விநாயகருக்கு லட்டுகளை வைத்து படைக்கவும்

  MORE
  GALLERIES

 • 912

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  தனுசு:
  இன்று சட்டவிரோத செயல்கள் எதில் இருந்தும் விலகி இருங்கள். வியாபாரிகள் இன்று சில சவால்களே எதிர்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு தவறான முடிவும் நஷ்டத்தை உண்டாக்கும்.. கலை, அறிவியல் மற்றும் இயந்திரம் தொடர்பான தொழில்கள் செய்வோருக்கு இன்று லாபம் இருக்கும். அரசுப் பணியில் உள்ளோர் இன்று வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
  பரிகாரம்: நாள் நன்றாக செல்ல அனுமனை வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 1012

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  மகரம்:
  சில பாதகமான சூழ்நிலைகள் இருக்கும் என்பதால் வியாபாரிகள் தங்கள் தொழிலில் நெகிழ்வாக இருக்க வேண்டும். அலுவலக பணிகளில் சற்று தொய்வு ஏற்படும் அல்லது அலட்சியத்தால் பணிச்சுமை கூடும். எனவே கவனமாக இருக்கவும்.
  பரிகாரம்: பசுமாடுகளுக்கு உணவாக பசுந்தீவனம் கொடுங்கள்

  MORE
  GALLERIES

 • 1112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  கும்பம்:
  தொழில் ரீதியான உறவுகள் இன்று சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு கிடைக்கும் நேர்மறை சூழலை பயன்படுத்தி கொள்வீர்கள். உங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். முக்கியமான காரியங்கள் வேகமெடுக்கும். எனினும் அதீத உற்சாகத்தை தவிர்க்கவும்.
  பரிகாரம்: சிவபெருமானுக்கு தண்ணீர் வைத்து வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 1212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  மீனம்:
  வியாபாரத்தில் இன்று சீரான வளர்ச்சி இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கடைபிடிக்கும் சுறுசுறுப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று வெற்றி கிடைக்கும். தொழில் வல்லுநர்கள் சிறப்பாக இருப்பார்கள். நிதி விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.
  பரிகாரம்: ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்

  MORE
  GALLERIES