கடகம்:
நீண்டகாலமாக தடைபட்டு கொண்டே இருக்கும் உங்களது நிறைவேறா சில திட்டங்கள் உங்களுக்கு இன்று மன அழுத்தத்தை தரும். எனினும் உங்களது பொருளாதார நிலை மேம்படும். உணர்ச்சிவசப்பட்டு யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காதீர்கள், எதிர்காலத்தில் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும்.
பரிகாரம் - விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்யவும்
சிம்மம்:
நீங்கள் இன்று நிதி சிக்கலை தவிர்க்க விரும்பினால், யாருடனும்எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் பொருளாதார இழப்பு ஏற்படலாம். தொடர்ச்சியான பிரச்சனைகளால், உங்கள் மன உறுதி பலவீனமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும்.
பரிகாரம் - மாடுகளுக்கு தீவனம் வைக்கவும்
துலாம்:
தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைகள் உங்களுக்கு நிதி ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்த கூடும். எனவே நீங்கள் இன்று கடன் வாங்க வேண்டியிருக்கும். விஷயங்களை இன்று சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகள் இன்று சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள்.
பரிகாரம் - எறும்புகளுக்கு சர்க்கரை கலந்த மாவை தீனியாக வைக்கவும்
தனுசு:
உங்களது பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்று சில சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களது அன்புக்குரியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்று பணம் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தில் இன்று கவனமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
பரிகாரம் - அன்னை சரஸ்வதி தேவியை வழிபடவும்