மேஷம்:
ஒத்துழைக்கும் மனப்பான்மையை நீங்கள் இன்று கொண்டிருந்தால் வேலை மற்றும் வியாபாரம் சூடு பிடிக்கும். முதலீடு விஷயங்களில் இன்று விழிப்புடன் செயல்பட வேண்டும். நல்ல வாய்ப்புக்காக காத்திருங்கள். உங்கள் வியாபார நடவடிக்கைகள் நுகர்வோருக்கு எளிதாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். எதிலும் அவசரம் காட்டாதீர்கள்.
பரிகாரம் - மஞ்சள் நிற உணவு பொருட்களை தானம் செய்யுங்கள்
ரிஷபம்:
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொழில் இன்று சிறப்பாக அமையும். உங்களின் விவேகமும், சுறுசுறுப்பும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். வேலையில் எச்சரிக்கையாக இருங்கள். உங்களின் ஆக்கப்பூர்வ செயல் மற்றும் உழைக்கும் முயற்சிகளுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம் - பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுங்கள்
மிதுனம்:
பொருளாதார விஷயங்களில் இன்று முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கும். பரம்பரை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இன்று எளிதாக முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் விரிவாக்க விஷயங்கள் இன்று வேகம் எடுக்கும்.
பரிகாரம் - பைரவர் கோவிலில் தேங்காய் வைத்து வழிபடுங்கள்
கடகம்:
தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு மற்றும் நிபுணர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாப சதவீதம் சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள முயற்சிகள் இன்று சாதகமாக முடியும். உங்களது நம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் பார்ட்னர்கள் நன்றாக உதவுவார்கள்.
பரிகாரம் - அன்னை சரஸ்வதிக்கு மாலை அணிவித்து வழிபடுங்கள்
சிம்மம்:
இன்று கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று யாருடனும் மோதல் வேண்டாம், விவாதத்தை தவிர்க்கவும். சமத்துவ உணர்வைப் பேணுங்கள். தொழில் கவனம் அதிகரிக்கும். நிர்வாகத்தில் திறம்பட செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கான நன்மைகள் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம் - சிவப்பு நிற பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்
துலாம்:
தொழில் வியாபாரத்தில் இன்று சுறுசுறுப்பு இருக்கும். விடாமுயற்சியை கடைப்பிடித்து கடினமாக உழைத்தால் இன்று வெற்றி கிடைக்கும். தொழில் வல்லுநர்கள் சிறப்பாக இருப்பார்கள். நிதி விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும், செலவுகளை கட்டுப்படுத்தவும்.
பரிகாரம் - எறும்புகளுக்கு தீனி வைக்கவும்
தனுசு:
அலுவலகப் பணிகளில் இன்று பொறுமையை கடைபிடிக்கவும். கொடுக்கப்படும் பணிகளை விவேகத்துடன் முன்னெடுப்பீர்கள். பொருளாதார விஷயங்களில் உங்களது தெளிவு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் அறிவுரையை ஏற்று கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் சீராக இருக்கும்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு தண்ணீர் வைத்து வழிபடுங்கள்
மகரம்:
வியாபாரிகளுக்கு தொழில் விஷயங்கள் இன்று சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் வேகமாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். வேறு வேலை மாற விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும். சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய சில நிதி நன்மைகள் இன்று கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுங்கள்
கும்பம்:
வியாபாரிகள் தங்கள் தொழில் முன்னேற்றத்தால் உற்சாகம் கொள்வார்கள். தகுதி மற்றும் அனுபவ உதவியுடன் ஊழியர்கள் அலுவலகத்தில் தங்கள் இலக்குகளை அடைவார்கள். புதிய திட்டத்தில் வேகம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பொருளாதார பலன்கள் சீராக இருக்கும்.
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றவும்
மீனம்:
பணியிடத்தில் நீங்கள் இன்று எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவீர்கள். முதலீடு சம்பந்தமாக எவ்வித சலனத்தையும் இன்று தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு தொழிலில் இன்று லாபம் மற்றும் வெற்றி கிடைக்கும். இலக்கில் கவனம் செலுத்துங்கள். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ சுக்தா பாராயணம் செய்யவும்