கடகம்:
சற்று சவாலான நாளாக இருக்கும். தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்வதை தவிர்க்க வேண்டும். புதிய வேலைகளை துவங்குவதை தள்ளி போடுவது நல்லது. முதல் பாதியில் நிலைமை சற்று மோசமாக இருந்தாலும், நாளின் இரண்டாம் பாதியில் இருந்து உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடந்தேறும்.
பரிகாரம் - மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
துலாம்:
மிகக் கடின உழைப்பை போட்டு வெற்றியை ஈட்ட வேண்டிய அவசியம் உருவாகும். புதிய வேலைகளை துவங்குவதற்கு ஏற்ற நாள். தேவையற்ற மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம் அலுவலகம் செல்வோருக்கு உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வேலை பளு அதிகரிக்கும்.
பரிகாரம் - எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்
தனுசு:
தொழிலில் தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். முழு முயற்சியுடன் செயல்பட்டு உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில குழப்பங்கள் உண்டாகலாம். அலுவலக ரீதியாக வெளியிடங்களுக்கு சுற்று பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.
பரிகாரம் - விநாயகருக்கு லட்டு காணிக்கை வைத்து வழிபட வேண்டும்