மேஷம்:
இன்றைக்கு உங்களுடைய நிதி பரிவர்த்தனைகளில் தெளிவான முடிவை எடுக்கும் சூழல் ஏற்படும். அலுவலகப் பணிகளைத் தாமதப்படுத்தாதீர்கள். வேலையை உடனே செய்து முடிக்கும் பட்சத்தில் தொழிலில் லாபம் பெறுவீர்கள். உங்களின் இலக்க அடைவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். எந்த முடிவு எடுத்தாலும் புத்திசானத்தனமாக எடுக்கும் மனநிலை ஏற்படும். எதிலும் பேராசைக் கொள்வதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கவும்.
ரிஷபம்:
இன்றைக்கு உங்களுடைய தொழிலில் செல்வாக்கு அதிகரிக்கும். மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றி காண்பீர்கள். அலுவலகப் பணி மற்றும் உத்தியோகப் பணியில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் மேற்கொண்ட சிறு சிறு சேமிப்பின் வாயிலாக வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட கால விஷயங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழிலில் நல்ல பலன் மற்றும் லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: குரு அல்லது பெரியவர்களை மதிக்கவும்.
மிதுனம்:
இன்றைக்குப் பணியிடத்தில் வெற்றி பெறும் சூழல் ஏற்படும். பொருளாதார ரீதியிலான வணிக விஷயங்களில் கவனமுடன் இருக்கவும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் நேர்மையாக செயல்படுவீர்கள் என்றால் அதற்கான பலன் கிடைக்கும். சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
பரிகாரம்: பணப்பையில் வெள்ளி நாணயம் வைக்கவும்.
கடகம்:
இன்றைக்கு லாபம் நிறைந்த நாளாக அமையும். பல நாள்களாக எதிர்ப்பார்த்துக் காத்திருந்த பணிகளை முடித்து அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் முக்கியமான விஷயங்களை மேற்கொள்ளும் போது எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். லாப விஷயத்தில் அதீத கவனத்துடன் செயல்படுவீர்கள்.
பரிகாரம்: உங்களுக்குப்பிடித்தமான கடவுளை வழிபடவும்.
சிம்மம்:
இன்றைக்குக் கவனமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் நாளாக மாறும். உங்களுடைய வணிகப்பணிகளில் எப்போதும் சுயநலமுடன் செயல்படாதீர்கள். அலுவலகத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதால் எந்தவொரு விஷயத்திலும் திட்டமிடுதல் அவசியம்.
பரிகாரம்: பணியிடத்தில் விநாயகப் பெருமானை வழிபடவும்.
துலாம்:
இன்று உங்கள் முதலீட்டில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமுடன் செயல்படவும். பங்குச் சந்தை அல்லது கிரிப்டோவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பொருளாதார விஷயங்களில் கட்டுப்பாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் விழிப்புணர்வு அதிகரிக்கும். வேலை விஷயங்களில் பொறுமையைக் காட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
பரிகாரம்: அனாதை இல்லத்திற்கு உணவு கொடுங்கள்.
விருச்சிகம் :
இன்று உங்கள் வியாபாரத்தில் மற்றவர்களிடமிருந்து எதிர்பாராத லாபத்தையும் மரியாதையையும் பெறுவீர்கள். வெளி நாட்டிலிருந்தும் புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். நிதானமுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிப்பாதைக்கு செல்லும் நிலை ஏற்படும்.
பரிகாரம்: செல்லப் பிராணிகளுக்குத் தானம் செய்யவும்.
தனுசு:
இன்றைக்கு முக்கிய அலுவலக விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். நிதானமுடன் செயல்படவும். முதலீடு தொடர்பாக நல்ல ஆலோசகர்களைத் தொடர்பு கொள்ளவும். தொழிலபதிபர்களாக இருந்தால் பணிபுரியும் துறையில் சிறப்பான பலன்களைப் பெறும் சூழல் ஏற்படும். எந்த தொழிலும் ஒழுக்கத்துடன் பணியாற்றுவீர்கள். சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் சமர்பிக்கவும்.
மகரம்:
இன்றைக்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களது வாழ்க்கையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தரும். தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் தைரியம் அதிகரிக்கும். நீங்கள் பணிபுரியும் துறையில் சாதகமான நேரத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவார்கள். தொழில் முயற்சிகள் தொடரும். நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: பெரியவர்களின் ஆசியைப் பெறுங்கள்
கும்பம்:
உங்களது தொழிலில் வெற்றிப் பெறும் சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியைப் பெறுவீர்கள். புதிய இலக்குகளை அடைவதில் உற்சாகம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சேவைத்துறையில் இருந்தால் உங்களது பணியை சிறப்பாக செய்து முடிக்கும் நிலை ஏற்படும்.
பரிகாரம்: பஞ்சாமிர்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்.
மீனம்:
இன்றைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்கள் கிடைக்கும் நாளாக அமையும். அலுவலகப் பணியில் இருந்தால் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறப்பாக செயல்படுவார்கள். நேர்மையுடன் செயல்பட்டால் உங்களது செல்வாக்கு அதிகரிக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் அர்ச்சனை செய்யவும்.