மேஷம்
வியாபாரம் சம்மந்தப்பட்ட முடிவுகளில் தெளிவாக செயல்பட வேண்டும். இது பல சிக்கல்களை எளிதாகவும், விரைவாகவும் தீர்க்க உதவும். தேவையற்ற வேலைகளில் நேரத்தை வீணாக்க வேண்டும், அவ்வாறு செய்வதால் பண மட்டுமல்லாமல் உங்களுக்கு வரும் வாய்ப்புகளையும் இழக்க நேரிடும்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு நீர் வைத்து வணங்கி வழிபடவும்.
ரிஷபம்
இன்று நிதி விஷயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஏற்கனவே இருக்கும் தொழில் விரிவடையும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. ஏதாவது ஆன்லைன் மோசடியில் நீங்கள் பாதிக்கப்படலாம்.
பரிகாரம்: பைரவர் கோவிலில் தேங்காய் உடைக்கவும்.
மிதுனம்
பணம் அல்லது நிதி ரீதியாக, இன்று சுமாரான நாள் தான், கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிக்கல்கள் இருக்கலாம். சில வேலைகளைச் செய்ய திடீரென்று கடன் வாங்கும் சூழல் நிலவும். பணியிடத்தில் மோசடி நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எந்த ஆவணத்திலும் கையெழுத்திடும் முன், முழுதாக கவனமாக படிக்கவும்.
பரிகாரம்: சூரியனுக்கு நீர் வைத்து வழிபடவும்.
கடகம்
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் பற்றி கவலை இருக்கும், ஆனால் காலப்போக்கில் எல்லாவற்றையும் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்கள் வாராமல் இருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த பணத்தை வீட்டு செலவுக்கு பயன்படுத்த வேண்டாம், சரியான ஆலோசனையை பெற்ற பிறகு முதலீடு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள்.
சிம்மம்
உங்களுக்கு அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வீண் வேலைகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு வேறு கருத்துகள், வேறுபாடுகள் அதிகரிக்கலாம். ஆனால், அதை பொருட்படுத்த வேண்டாம். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.
பரிகாரம்: மஞ்சள் நிற உணவு பொருட்களை தானம் செய்யுங்கள்.
கன்னி
உடல் நல பாதிப்பு காரணமாக அலுவலகத்தில் வேலை பாதிக்கப்படலாம். இதனால், மேலதிகாரிகளின் பார்வையில் நீங்கள் தவறாக தெரியக்கூடும். இருப்பினும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. திடீர் பண ஆதாயமும் உருவாகும். எந்த சூழலிலும் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் வைத்து அர்ச்சனை செய்யுங்கள்.