மேஷம்:
வியாபாரிகள் தங்கள் தொழில் விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடின உழைப்பிற்கான சிறந்த பலன்களை பெறுவீர்கள். மெஷினரி, பணியாளர் விவகாரங்கள் போன்றவற்றில் சிறுசிறு பிரச்சனைகள் இன்று வரலாம். உங்கள் முடிவுகளில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.
பரிகாரம்: 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்
ரிஷபம்:
பிசினஸ் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று சிறந்த நாள். உங்களை தேடி புதிய வாய்ப்புகள் அல்லது சலுகைகள் வரலாம். சுற்றத்தாருடன் பழகுவது இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பார்ட்னர்ஷிப் தொடர்பான வணிகத்தில் கவனமுடன் இருப்பது மிகவும் முக்கியம்.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்யுங்கள்
கடகம்:
வியாபாரிகள் இன்று மார்க்கெட்டிங் தொடர்பான வேலைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புதிய திட்டங்களை தொடங்க இன்று நல்லநாள் இல்லை. இன்று நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆர்டர்களைப் பெறலாம். உத்தியோகம் செய்பவர்கள் பணியிடத்தில் இன்று சில சிறப்பு அதிகாரங்களைப் பெறலாம்.
பரிகாரம்: துர்கா தேவிக்கு சிவப்பு புடவை காணிக்கையாக கொடுங்கள்
கன்னி:
வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று வியாபாரத்தில் சாதகமான சூழல் உருவாகும். இன்று நீங்கள் சில சாதனைகளை செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை முடிப்பதன் மூலம் எண்ணற்ற பலன்களை பெறுவீர்கள். அலுவலக பணியாளர்கள் தங்கள் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை சரியாக ஒழுங்கமைத்து கொள்ளவும்.
பரிகாரம்: வாழை மரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்
மகரம்:
இன்று உங்களது வேலையின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தொழில் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணத்தை வசூலிக்க இன்று சாதகமான நாள். அலுவலகத்தில் உங்கள் சீனியர்களுடனான உறவு சுமுகமாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
பரிகாரம்: மாற்றுத்திறனாளி நபர்களுக்கு சேவை செய்யுங்கள்
கும்பம்:
ஊழியர்கள் பணியிடத்தில் தங்களுக்கு கொடுக்கப்படும் இலக்கை முடித்து நிம்மதி பெறுவார்கள். தனிப்பட்ட பிரச்சனைகளாலும், ஆரோக்கிய பிரச்சனைகள் காரணமாக வியாபாரிகள் தங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்த முடியாது. எனினும் பெரும்பாலான வேலைகளை தொலைபேசி மூலம் முடிக்கலாம்.
பரிகாரம்: எறும்புகளுக்கு தீனியாக வைக்கும் மாவில் சர்க்கரை சேர்க்கவும்
மீனம்:
வியாபாரிகள் தங்கள் தொழிலை மார்க்கெட்டிங் செய்வதில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். வணிகத்தை விரிவாக்கும் திட்டங்களை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். பார்ட்னர்ஷிப் கொண்டுள்ள வியாபாரத்தில் பரஸ்பர உறவுகளை சிறப்பாக பேண வெளிப்படைத்தன்மை இருப்பது அவசியம்.
பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்