மேஷம்:
நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டிய நாள். சில பிரச்சனைகளும், விசாரணைகளும் இருக்கக்கூடும் என்பதால் வணிக ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் எப்போதும் அலட்சியமாக இருக்க வேண்டாம். பணியில் சிந்தித்து செயல்பட வேண்டும். அலுவலத்தில் புதிய திட்டத்தில் இணைந்து பணியாற்றும் சூழல் நேரிடலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வழிபாடுகள் செய்யவும்.
ரிஷபம்:
உங்களது பணியிடத்தில் சில சிரமங்கள் மற்றும் சிக்கல்கள் இன்றைக்கு இருக்கக்கூடும். எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்னதாக அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது. பொருளாதாரத்தில் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது. இருந்தப்போதும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையைப் பெறக்கூடும்.
பரிகாரம்; அன்னை சரஸ்வதியை வணங்குங்கள்.
மிதுனம்:
இன்றைய நாள் மிகவும் சிறப்பாக அமையும். வணிகம் தொடர்பான பொது பரிவர்த்தனை மற்றும் தொடர்பு ஆதாரங்களை வலுப்படுத்துவதில் கவனம் தேவை. நீங்கள் மேற்கொள்ளும் வியாபாரத்தில் உங்களது பார்ட்னரை விட பெரும்பாலான முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களது மூத்தவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது.
பரிகாரம்; யோகா பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்.
கடகம்:
இன்றைக்கு தொழில் சார்ந்த பணிகளை முடிப்பதில் பல சிரமங்களை நீங்கள் சந்திக்கக்கூடும். பணிபுரியும் இடத்தில் குடும்பத்தை நினைத்து கவலைக் கொள்ளாதீர்கள். இது பணியில் பிரச்சனையை ஏற்படுத்தும். மார்க்கெட்டிங் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும்.
பரிகாரம்; சிவ மந்திரத்தை உச்சரிக்கவும்.
சிம்மம்:
இன்றைக்கு மார்க்கெட்டிங் தொடர்பான வேலை அல்லது பயணத்தை ஒத்திவைக்கவும். இதனால் சில பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்கலாம். இயந்திரங்கள் மற்றும் மோட்டார் பாகங்கள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த ஆர்டர்கள் கிடைக்கும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்; சூரிய பகவானை வழிபடவும்.
துலாம்:
இன்றைக்கு உங்களின் அனைத்து வேலைகளிலும் மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், ஆலோசனையும் உங்களை பணியில் முன்னேற்றம் அடைய செய்யும். கடந்த சில நாள்களாக வியாபாரத்தில் நீங்கள் மேற்கொண்ட உழைப்பு உங்களுக்கு சாதகமான பலனைக்கொடுக்கும். எந்தவொரு புதிய திட்டங்களையும் தீட்ட வேண்டாம். இது சரியான நேரம் இல்லை என்பதால் தற்போதைய நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்: ஹனுமான் மந்திரத்தை உச்சரிக்கவும்.
விருச்சிகம்:
இன்றைக்கு சற்று சறுக்கல்கள் ஏற்படும் நாள். வியாபாரத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். பார்ட்னருடன் சேர்ந்து வணிகம் செய்யும் போது வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுங்கள். இல்லையென்றால் தவறானப் புரிதல்கள் உங்களது உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும். வியாபாரத்தில் அதிக பணம் செலவழிக்க வேண்டும். நிலைமை சாதகமாக இல்லை என்பதால் எப்போதும் நிதானம் தேவை.
பரிகாரம்; ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.
தனுசு:
இன்றைக்கு அனைத்துத்துறைகளிலும் வெற்றி பெறக்கூடிய நாளாக அமையும். வியாபாரத்தில் மற்றவர்களைப் பின்பற்றாமல் உங்களது திறமை மீது மட்டும் நம்பிக்கை வைக்கவும். இதனால் வெற்றியைப் பெறுவீர்கள். இல்லையென்றால் பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். கவனமுடன் செயல்படவும். அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக எப்போதும் வைத்திருங்கள்.
பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள்.
மகரம்:
இன்றைக்குக் கவனமாக இருக்க வேண்டிய நாள். சொத்து அல்லது வேலை தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்யும் போது துரோகம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதானமாக மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். வியாபாரத்தில் வரக்கூடிய ஆர்டர்களை நிறுத்துவது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படும். எனவே அனுபவம் வாய்ந்த நபர்களின் வழிகாட்டுதலின் பேரில் நல்ல முடிவை எடுப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
பரிகாரம்: எறும்புகளுக்கு மாவு ஊட்டவும்.
கும்பம்:
வாழ்க்கையில் இன்றைக்கு பல சிரமங்கள் இருந்தாலும் தீர்க்கும் மனநிலை ஏற்படும். கிரகப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. பொது வர்த்தகம், ஊடகம், சந்தைப்படுத்தல் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள் இன்று. அதிக வேலையின் காரணத்தினாலும், வீட்டிலேயே அலுவலக வேலைகளைச் செய்வதால் தனிப்பட்ட சில வேலைகளைத் தள்ளிப் போட வேண்டியிருக்கும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடவும்.
மீனம்:
இன்றைக்கு வெற்றியைப் பெறக்கூடிய நாளாக அமையும். இந்த ராசிக்கரர்கள் பணிபுரியும் இடத்தில் மற்றவர்களால் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் மேலாதிக்கம் நிலைத்திருக்கும். அதே சமயம் மார்க்கெட்டிங் மற்றும் மீடியா தொடர்பான பணிகளில் இருந்து சற்று விலகி இருக்கவும். எப்போதும் நேர்மறையான சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்தவும்.
பரிகாரம்; யோகா பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்.