ரிஷபம்:
உங்களது நிர்வாகப் பணிகள் வேகமெடுக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். லாப சதவீதம் முன்பை விட சற்று உயரும். முக்கியமான செயல்பாடுகளில் இன்று உங்களது கவனம் அதிகரிக்கும். உங்களது அனுபவத்தை பயன்படுத்தி விஷயங்களை சாதகமாக்கி கொள்வீர்கள்.
பரிகாரம் - பைரவர் கோவிலில் தேங்காய் வைத்து வழிபடவும்
கடகம்:
வியாபாரத்தில் உள்ளவர்கள் இன்று அலட்சியமாக இருக்க வேண்டாம். பொருளாதார விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நன்மைகள் கிடைக்கும் இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தோடும் நெருக்கமாக இருப்பீர்கள்.
பரிகாரம் - பசு மடத்திற்கு சென்று சேவை செய்யுங்கள்
தனுசு:
சமூகப் பணிகளில் இன்று உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். வணிக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெரியவர்களிடம் உங்களுக்கான மரியாதையை காப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகளை இன்று கேட்பீர்கள்.
பரிகாரம் - வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் வயதில் மூத்தவர்களிடம் ஆசி பெறவும்
கும்பம்:
தனிப்பட்ட விஷயங்கள் சிறப்பாக இருக்கும். இதுநாள் வரை உங்களுக்கு இருந்து வந்த தயக்கங்கள் நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முக்கிய ஆக்கப்பூர்வ முயற்சிகள் வெற்றியடையும். எதிலும் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக இருக்கும்.
பரிகாரம் - ராமரக்ஷா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்