மேஷம்:
இன்று உங்கள் வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை அனுபவிப்பீர்கள். கிரியேட்டிவிட்டி மற்றும் சென்சிட்டிவிட்டி காரணமாக, நீங்கள் மனதளவில் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிப்பது சிறந்த பலன்களை பெற்று தரும்.
பரிகாரம்- ஏழைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் செய்யுங்கள்
ரிஷபம்:
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல நாளாக அமையும். நீங்கள் முழு நம்பிக்கையுடன் எந்த விஷயத்தையும் எதிர்கொண்டால் இன்று நீங்கள் திட்டமிட்டபடி அனைத்து வேலைகளும் சீராக நடக்கும். உங்களுக்கான மரியாதை இன்று அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.
பரிகாரம் - வறுமையில் வாடுவோரின் பசியை போக்குங்கள்
கடகம்:
நீங்கள் விருப்பப்பட்ட சில காஸ்ட்லி பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இன்று உங்களது புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏற்ப வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள்.
பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி காட்டி வழிபடவும்
கன்னி:
இன்று உங்கள் வாழ்க்கையின் வழியில் வரும் முக்கிய பொறுப்புகளை சிறப்பாக கையாள்வீர்கள். வயதில் மூத்தவர்கள் அல்லது உங்கள் குருவின் ஆசி பெறுவது நாளை சிறப்பாக்கும். மாணவர்களுக்கு இன்று சற்று சிரமமான நாளாக இருக்கும். மாணவர்கள் விஷயங்களில் தங்கள் கவனத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
பரிகாரம்: தெருவில் திரியும் பசுமாடுகளுக்கு தீவனம் வைக்கவும்
தனுசு:
அன்னை சக்தி தேவியை வழிபடுவது உங்களுக்கு இன்று சிறந்த பலன்களை பெற்று தரும். நீங்கள் இன்று மிகவும் வலுவாக இருப்பதை போல உணர்வீர்கள். உங்கள் மன உறுதி தேவையான விஷயங்களில் உங்களுக்கு வெற்றியைத் தரும். குடும்ப உறவுகள் மற்றும் வேலையில் அதிக கவனமாக இன்று இருக்க வேண்டும்.
பரிகாரம்: சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள்
மகரம்:
பெரியவர்கள் மற்றும் உங்களது ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின்படி இன்று நீங்கள்செயல்பட வேண்டும். இவர்களின் ஆலோசனைகளை பெற்று இன்று நீங்கள் செயல்பட்டால் தடைகள் நீங்கும். உங்கள் வழக்கமான நட்பு வட்டத்திலிருந்து சற்று வெளியே சென்று புதிய நபர்களுடன் இணைய முயற்சிப்பது அதிக நன்மைகளை தரும். ஏனென்றால் புதிய நண்பர்களை உருவாக்க உங்களுக்கு தேவை உள்ளது.
பரிகாரம்: ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுங்கள்
மீனம்:
இன்று உங்களின் பழைய செயல்கள் அல்லது முயற்சிகளை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். நீங்கள் ஏதேனும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்ட பின்னர் ஒரு முடிவு எடுங்கள். நீங்கள் செய்யும் செயல்களுக்காக மற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள் என எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.
பரிகாரம்: சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்