மேஷம்:
இன்று நீங்கள் புதிய ஆற்றலையும் வலிமையையும் உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் பதவி உயர்வு அல்லது சம்பளத்தை உயர்த்துவது பற்றி பேசுவார்கள். இதனால் இன்று உங்களது நாள் உற்சாகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் பல மாற்றம் பிறக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
.பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் மயில் தோகை அர்ச்சனை செய்யுங்கள்.
ரிஷபம்:
இன்று உங்களுக்குள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். யார் உங்கள் மீது எந்த விமர்சனத்தை முன் வைத்தாலும் அதை கண்டுக்கொள்ளாதீர்கள். உங்களது வேலையை மட்டும் தொடர்ச்சியாக செய்யுங்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி உண்டாகும். பணியிடத்தில் உங்களது தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் உங்களது வேலையை சிறப்பாக செய்ய உதவும். இதோடு உங்களுக்கான மரியாதையும் கூடும்.
பரிகாரம்: உணவில் கருப்பு மிளகு பயன்படுத்தவும்.
மிதுனம்:
இன்றைக்கு உற்சாகம் நிறைந்த நாளாக அமையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுக்கு அலுவலகத்தில் சில புதிய உரிமைகள் கிடைக்கும். . இன்று ஆக்கப்பூர்வமான வேலைகளில் மும்முரமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு நாள் சாதாரணமாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: ராமரக்ஷா ஸ்தோத்திர மந்திரத்தை உச்சரிக்கவும்.
கடகம்:
இன்று பண லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நல்லுறவு உண்டாகும். வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்துறையினருக்கு சிறப்பான நாளாக இருந்தாலும் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் கிடைக்காது. உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு உணவு கொடுங்கள்.
சிம்மம்:
அலுவலக வேலைகளை மும்முரமாக செய்வீர்கள். இன்றைக்கு நீங்கள் செய்யும் பணிகளால் எதிர்காலத்தில் பண பலன் கிடைக்கும். உங்களது கடன் வாங்கும் பழக்கம், சேமிக்கும் பழக்கத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். இல்லையென்றால் நிதி நெருக்கடி ஏற்படக்கூடும். வியாபாரிகளுக்கு நாள் சிறப்பாக இருக்கும். அனுகூலமான ஒப்பந்தம் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தமான சூழ்நிலைகள் மறையும். சுப காரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும்.
பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.
கன்னி:
இன்றைக்கு எதிலும் ஆர்வம் அதிகரிக்கும் நாளாக அமையும். உங்களது செயல்பாடுகளில் லாபகரமான கண்ணோட்டம் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். உங்களுக்கு தேவைப்படக்கூடிய அத்தியாவசிய பொருள்களை வாங்க வேண்டியிருக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.
பரிகாரம்: அனுமனை வழிபடவும்.
துலாம்:
இன்றைக்கு பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றமான சூழல் நிலவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவம். தொழிலதிபர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பணிகள் நிறைவேறும். வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் இன்றைக்கு எதிலும் முதலீடு செய்வதற்கு முன்னதாக ஆவணங்களை நன்றாக படிக்கவும்.
பரிகாரம்: சிறுமிகளுக்கு இனிப்பு கொடுங்கள்.
விருச்சிகம்:
இன்றைக்கு உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். வியாபாரத்தில் வெற்றியைப் பெறுவதற்கு யாரிடமாவது ஆலோசனைப் பெற வேண்டியிருக்கும். வியாபாரா பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். யாரிடனும் வீண் வாக்குவாதம் வேண்டாம். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் மேம்படும். நிலம் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: பசுவிற்கு பச்சை புல் கொடுக்கவும்.
தனுசு:
பெருமைகள் நிறைந்த நாளாக இன்று உங்களுக்கு அமையும். பணியிடத்தில் உங்களை நிரூபிப்பதற்கான பல வாய்ப்புகள் அமையும் என்பதால் அதை சரியாக கையாண்டு வெற்றிக்காண்பீர்கள். யாரும் தெரியாத நபருடன் வணிக ஒப்பந்தம் செய்யும் முன்னதாக நிதானமுடன் செயல்படவும். எந்தவொரு முடிவையும் விசாரித்து எடுக்கவும். மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடிவடையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தாமதங்கள் குறையும்.
பரிகாரம்: எறும்புகளுக்கு உணவு அளிக்கவும்.
மகரம்:
இன்றைக்கு உங்களது திறமைகள் வெளிப்படும் நாளாக அமையும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் உங்களது குழுக்களுடன் இணைந்து செயல்படுவீர்கள்.. இதனால் எந்தவொரு கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பண சிக்கல்கள் ஏற்படும் என்பதால் எதிர்காலத்திற்கான திட்டங்களை அறிந்து செயல்படுங்கள். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
பரிகாரம்: மாலையில் ஆல மரத்தடியில் தீபம் ஏற்றவும்.
கும்பம்:
உங்கள் வாழ்க்கையில் தொழில் சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக இருப்பவர்களை தோற்கடிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுடன் உறவு இனிமையானதாக இருக்கும். வாகனம்- நிலம் அல்லது ஏதேனும் விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதற்காக ஏதேனும் ஒரு முடிவு எடுப்பீர்கள். புதிய ஒன்றில் முதலீடு செய்வது நல்லது. பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பரிகாரம்: அனுமன் கோவில் வழிபாடு மேற்கொள்ளவும்.
மீனம்:
பொருளாதார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. யாருடனும் தேவையில்லாத பண பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையென்றால் முதலீடு என்ற பெயரில் பல மோசடிகள் நடக்கக்கூடும். நீண்ட நாள்களாக மனதில் இருந்து வந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். இந்நாளில் பெரியோர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
பரிகாரம்: சூரியபகவானுக்கு தண்ணீரால் அர்ச்சனை செய்யவும்.