மேஷம்:
உங்கள் வசம் உள்ள பிசினஸ் ப்ராஜக்ட்டில் சில சிக்கல்களை சந்திக்கலாம். இருப்பினும் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று வணிகத்தில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
பரிகாரம்: 108 முறை காயந்த்ரி மந்திரம் உச்சரிக்கவும்
சிம்மம்:
வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவாக்குவது தொடர்பான திட்டத்தில் இன்று தீவிரமாக செயல்பட வேண்டும். இன்று கிரக நிலை உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், ஊழியயர்களின் பணிகளில் தாமதங்கள் ஏற்படலாம். இதனால் வீட்டில் இருந்தாலும் கூட அலுவலக வேலைகளை முடித்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.
பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்யவும்
கன்னி:
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் மிகவும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இன்று தொழில் சார்ந்த விரிவாக்க திட்டங்களை மறுபரிசீலனை செய்யுங்கள். எந்த ஒரு சிறிய பெரிய முடிவையும் எடுக்கும் போது தொழிலில் மூத்தவர்களின் வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் பெறுவது அவசியம்.
பரிகாரம்: வாழை மரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்
துலாம்:
இன்று நீங்கள் வியாபாரம் தொடர்பாக ஈடுபடும் எந்த ஒரு செயல்பாடும் சாதகமாக முடியும். வியாபாரிகள் அலட்சியம் மற்றும் தாராள மனப்பான்மையை இன்று வெளிப்படுத்தினால் அது வணிகத்திற்கு தீங்காக முடியும். எதிலும் கவனமாக செயல்படுவது அவசியம்.
பரிகாரம்: மஹாலட்சுமிக்கு தாமரை மலரை காணிக்கையாக வைத்து வழிபடுங்கள்
விருச்சிகம்:
நீங்கள் பிறருக்கு கடனாக கொடுத்த பணத்தை இன்று திரும்ப பெறலாம். பிறருடனான தொடர்பு வலுவாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். எனினும் அலுவலக வேலையில் நீங்கள் காட்டும் கவனக்குறைவால் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: தெரு நாய்களுக்கு உணவளிக்கவும்
கும்பம்:
கூட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பார்ட்னருடன் இணக்கமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் வணிகம் பாதிக்கலாம். வியாபாரத்தில் இன்று பெரிய ஒப்பந்தம் அல்லது ஆர்டர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் தொடர்புகளை மேலும் பலப்படுத்த கருத்தில் கொள்ளுங்கள்.
பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்
மீனம்:
இன்று புதிய இயந்திரங்கள் அல்லது புதிய தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இன்று நீங்கள் ஒரு புதிய சாதனையை செய்ய வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் தங்கள் தொழிலில் முன்னேறுவதற்கான தொழில்நுட்ப திட்டங்களில் கவனம் செலுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுங்கள்