மேஷம்:
வியாபாரிகளுக்கு இன்று பணியாளரால் சில இடையூறுகள் மற்றும் தடைகள் ஏற்படலாம். எனினும் திறம்பட செயல்பட்டால் பிரச்சனைகளை சரி செய்யலாம். பணியிடத்தில் கொடுக்கப்படும் வேலையில் அலட்சியம் காட்டுவது உயர் அதிகாரிகளின் கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே கவனம் தேவை. கோபம் மற்றும் அதீத நம்பிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.
பரிகாரம் - அரச மரத்தின் கீழ் விளக்கு ஏற்றவும்
ரிஷபம்:
இன்று நீங்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவை ரகசியமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் யாரேனும் ஒருவர் அதை தவறாகப் பயன்படுத்தி உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த மாற்றங்களை பெற்று நிம்மதி அடைவார்கள்.
பரிகாரம் - கிருஷ்ண பெருமானை வழிபடுங்கள்
மிதுனம்:
வியாபாரிகள் தங்கள் வணிகத்தில் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் இன்று உள்ளது. இதில் தவறு நிகழ்ந்தால் ஒரு பெரிய ஆர்டர் உங்களை விட்டு நழுவி செல்லலாம் அல்லது ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம். அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு இன்று பணிச்சுமைகள் இருக்கும்.
பரிகாரம் - மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்
கடகம்:
வியாபாரிகள் இன்று தங்கள் வியாபாரத்தில் அலட்சியமாக இருக்க கூடாது. வியாபாரத்தில் இன்று ஒரு புதிய ஒப்பந்தம் கிடைக்கலாம். எனினும் அதன் விதிமுறைகளை முழுமையாக ஆய்வு செய்வது பிறகு ஏற்று கொள்வது அவசியம். பார்ட்னர்ஷிப்பில் இதுநாள் வரை நிலவி வந்த சிக்கல்கள் இன்று தீரும்.
பரிகாரம் - எறும்புகளுக்கு தீனி வைக்கவும்
சிம்மம்:
வியாபாரிகள் தங்கள் வணிகத்தில் உள்ள உள்அமைப்பு மற்றும் பணியாளர்களுடன் சரியான ஒருங்கிணைப்பை இன்று பேணுவது அவசியம். ஊதியம் வாங்குபவர்கள் தங்களுக்கு தடை ஏற்படும் பணிகளில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
பரிகாரம் - விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைக்கவும்
துலாம்:
இன்று பணியாளர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது. கிரியேட்டிவ் மற்றும் மீடியா தொடர்பான வணிகத்தில் இருப்பவர்கள் இன்று குறிப்பிடத்தக்க சாதனை செய்வார்கள். சக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நம்பிக்கை வைப்பது இன்று நாளை சிறப்பானதாக இருக்கும்.
பரிகாரம்: இன்று அன்னை சரஸ்வதியை வழிபடுங்கள்