மேஷம்:
தொழில் செய்வதற்கு ஏற்ற நாள். வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிர்ஷ்டம் இருக்கும். கோப்புகளில் கவனம் தேவை. தேவையற்ற ஆபத்துக்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமான விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். மொத்தத்தில் மங்களகரமான நாளாக இருக்கும்.
பரிகாரம் - ஆஞ்சநேயருக்கு தேங்காய் வைத்து வழிபட வேண்டும்
ரிஷபம்:
வேலையில் சற்று எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம். பொருளாதார விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. புதிய மனிதர்களை சந்திக்கும் போது கவனம் தேவை. புத்தி கூர்மையை பயன்படுத்தி வேலை செய்வது நல்லது
பரிகாரம் - சூரிய உதயத்தின் போது நீர் சமர்ப்பணம் செய்து வழிபட வேண்டும்
சிம்மம்:
அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் மதிப்பு அதிகரிக்கும். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் வேலைகளில் அதிக கவனம் தேவை. நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் போதே அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரிகாரம் - சிவ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
கன்னி:
பொருளாதார விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். அலுவலகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. உங்களுடைய திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய தொழில் ஒன்றை செய்வதற்கு ஆர்வம் ஏற்படும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
பரிகாரம். – சரச்வஹி தேவியை வழிபட வேண்டும்
விருச்சிகம்:
தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகம் செல்வோருக்கு வெற்றிகள் உண்டாகும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. திறமையை பயன்படுத்தி வெற்றியை ஈட்டுவீர்கள். சேமிப்புகள் உண்டாகும்.
பரிகாரம் - சிகப்பு பழங்களை ஏழைகளுக்கு தானம் அளிக்க வேண்டும்.
தனுசு:
உங்கள் கொள்கைகளில் கவனம் தேவை. தொழிலில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற போட்டிகளை தவிர்ப்பது நல்லது. புதிய வாய்ப்புகள் உண்டாகும். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். கோப்புக்களில் கவனம் தேவை. ஒப்பந்தங்களில் கவனம் தேவை.
பரிகாரம் - சிவனுக்கு நீர் வைத்து வழிபட வேண்டும்.
கும்பம்:
தொழில் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சுற்றியுள்ளிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டமான நாளாக அமையும். ஆரோக்கியமான போட்டி ஏற்படும்.
பரிகாரம் ராமருக்கு ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும்
மீனம்:
அலுவலகத்தில் முக்கிய நபராக இருப்பீர்கள். தொழிலில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. லாபம் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. அதிர்ஷ்டமான நாளாக அமையும். ஏற்கனவே தீட்டி திட்டங்களை செயல்படுத்த ஏற்ற நாள். வல்லுநர்களிடம் இருந்து ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது.
பரிகாரம் - ஆஞ்சநேயர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்