மேஷம்:
இன்றைக்கு நம்பிக்கை மேம்படும் நாளாக அமையக்கூடும். பூர்வீக சொத்துகளில் அனுகூலம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழிலில் நல்ல சலுகைகள் உண்டாகும். பொருளாதார நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அன்பானவர்களுடன் மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்துக் கொள்வீர்கள்.
பரிகாரம்: சர்க்கரை கலந்து மாவு பிரசாதம் வழங்கவும்
ரிஷபம்:
வாழ்க்கையில் பெருமை நிறைந்த நாளாக அமையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். உறவினர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மதிப்புகளை ஊக்குவிக்கும் பராம்பரிய பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் ஆலோசனைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்வீர்கள்.
பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.
மிதுனம்:
மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவுகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிறு சிறு சலனங்களில் இருந்து விலகி இருங்கள். இல்லையென்றால் நீங்கள் தேவையில்லாத குற்றச்சாட்டில் சிக்கிக்கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
பரிகாரம்: பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் பெறவும்.
கடகம்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவதற்கு ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தள்ளிப்போன சில காரியங்கள் மீண்டும் நடைபெறும். வியாபாரம் சம்பந்தமானவர்களுக்குப் பணம் கிடைக்கும். உங்களது பொறுப்பை சரியான நேரத்தில் செய்து முடிக்கவும்.
பரிகாரம்: தாய் பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள்.
சிம்மம்:
உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். தடைப்பட்ட முக்கியமான வேலைகள் இன்று எளிதாக முடிவடையும். பரஸ்பர நம்பிக்கையுடன் உதவி செய்யுங்கள். இதன் மூலம் குடும்ப உறவுகளில் உங்களது பலன் அதிகரிக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.விரைவாக வெற்றியைப் பெற வேண்டும் என்றால், தகாத செயல்களில் கலனம் செலுத்த வேண்டாம்.
பரிகாரம்: லட்சுமி தேவியை வழிபடவும்.
கன்னி:
இன்றைக்கு எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும். குடும்ப உறுப்பினரிடம் உங்களது மதிப்பு உயரக்கூடும். சொத்து வியாபாரிகளுக்கு இன்று அதிக லாபம் கிடைக்கும். தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும்.
பரிகாரம்: ஹனுமான் மந்திரத்தை உச்சரிக்கவும்.
துலாம்:
சிக்கனத்துடன் செயல்பட்டால் நெருக்கடிகள் குறையும் நாளாக அமையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். இன்று பிறருக்குக் கொடுத்திருந்த பணத்தை நீங்கள் மீண்டும் பெறக்கூடிய சூழல் உண்டாகும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக மாற்றங்கள் ஏற்படாலம்.எந்தவொரு பெரிய நிகழ்விலும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: குருக்கள் அல்லது மூத்தவர்களின் ஆசியைப் பெறுங்கள்.
விருச்சிகம்:
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல செய்தி வரக்கூடிய அற்புதமான நாளாக அமையும். தொழிலதிபர்கள் மிகவும் புத்திசாலித்தமாக வேலை செய்யவேண்டும். நிதி விவகாரங்கள் சாதகமாகத் தீர்க்கப்பட்டு உங்களது வருமானம் அதிகரிக்கும்.
பரிகாரம்: விநாயகருக்கு லட்டுகளை பிரசாதமாக படையுங்கள்.
தனுசு:
பயனற்ற சிந்தனைகளால் மனதில் குழப்பம் தோன்றி மறையும். எந்த அரசியலிலும் ஈடுபடாமல் உங்களில் வேலையில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மனதில் தோன்றும். யார் மீதும் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
பரிகாரம்: சிவ சாலிசா பாராயணம் செய்யவும்.
மகரம்:
பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். சுப காரிய பேச்சுவார்த்தையில் நிதானத்துடன் இருக்கவும். தாராள மனப்பான்மை மக்களை ஈர்க்கும். எந்தவொரு தவறான திட்டங்களில் மூலதனத்தை முதலீடு செய்யாதீர்கள். படிப்பில் உங்களது செயல்திறன் சிறப்பானதாக இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு பொருள்களைத் தானம் செய்யுங்கள்.
கும்பம் :
இன்றைய நாளில் உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பயன்படுத்த தவறிவிடாதீர்கள். உங்களின் வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகளையும் நீங்கள் பெற முடியும். தெய்வீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்க ஆர்வம் காட்டுவீர்கள். முக்கியமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும்.
பரிகாரம்: விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடவும்.
மீனம்:
வெற்றியைத் தரும் இனிய நாளாக இன்றைக்கு அமையும். புதிய நம்பிக்கையுடன் எந்த வேலையையும் தொடங்கவும். நிலம் சம்பந்தமானவர்கள் தங்களின் வேலையில் வெற்றிக்காணும் நாளாக அமையும். தொழிலில் எத்தகைய மாற்றத்தையும் செய்வதற்கு முன்னதாக, மூத்தவர்களுடன் கலந்தாலோசனை செய்யவும். இல்லையென்றால் பெரும் நஷ்டத்தை சந்திப்பீர்கள்.
பரிகாரம்: சிவ மந்திரத்தை உச்சரிக்கவும்.