மேஷம்:
பணியிடத்தில் இன்று நீங்கள் புதிய செயல்கள் எதையும் தொடங்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் அதற்காக கடினமாக உழைத்தாலும் ஏற்ற சரியான பலன் கிடைக்காது. ரியல் எஸ்டேட், கமிஷன், துணி போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: ஹனுமானுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள்
ரிஷபம்:
திட்டமிட்டபடி இன்று சில வியாபார பணிகள் தடையின்றி முடிவடையும். இன்று நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகளும் நேர்மறை பலன்களை அளிக்கும். வியாபாரிகளுக்கு இன்று நல்ல டீல் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வேலை தேடி கொண்டிருக்கும் நபர்களுக்கு இன்று நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வேலை அல்லது வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டும்
மிதுனம்:
இன்று நடக்கும் சில சுப விஷயங்கள் உங்களுக்கு மன அமைதி தரும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக உள்ளது. வியாபாரத்தில் தடைப்பட்டிருந்த வேலைகள் வேகமடையும். வங்கி, வழக்கறிஞர், CA போன்ற தொழில் செய்வோருக்கு இன்று அதிர்ஷ்டம் உண்டு. ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை சிறப்பாக செய்வீர்கள்.
பரிகாரம்: சிவ லிங்கத்திற்கு தண்ணீர் அபிஷேகம் செய்யுங்கள்
கடகம்:
சொத்து அல்லது ஷேர்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய இன்று நல்ல நாள் சாதகமான நேரம். இலக்கியம், கலை தொடர்பான வியாபாரத்தில் உள்ளவர்கள் இன்று பெரும் வெற்றி பெறுவார்கள். உங்களது கடின உழைப்பின் முழு பலனை இன்று பெறுவீர்கள். பெரியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களின் வழிகாட்டுதல்களை புறக்கணிக்க கூடாது.
பரிகாரம்: விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைக்கவும்
சிம்மம்:
வியாபாரத்தில் ஈடுபட்டது வணிகர்கள் இன்று சில விஷயங்களில் ரிஸ்க் எடுக்கலாம். போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து நேரத்தை விரயம் செய்யாதீர்கள். வியாபாரத்தை அதிகரிப்பது தொடர்பான உங்களது திட்டங்கள் இன்று முழுவடிவம் பெறலாம். பணியிடத்தில் முக்கிய பொறுப்பு உங்களுக்கு கொடுக்கப்படலாம்.
பரிகாரம்: விஷ்ணு பெருமானை வழிபடவும்
கன்னி:
வேலை செய்பவர்களுக்கு இன்று லாபம் கிடைக்கும். அதாவது போனஸ் அல்லது கூடுதல் வருமானம் இருக்கலாம். வியாபாரிகள் இன்று புதிய ஆர்டர்களை பெற கூடும். அதே போல எந்த வேலையையும் நாளை பார்த்து கொள்ளலாம் என தள்ளிப் போடாதீர்கள். வியாபார நிலைமைகள் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: விநாயக மந்திரத்தை உச்சரிக்கவும்
துலாம்:
இரும்பு சார்ந்த வேலையில் ஈடுபடுபவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். பணியாளர்கள் அலுவலகத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு இன்று பணவரவு சாதாரணமாக இருக்கும். எதிலும் அவசரப்படாதீர்கள். உங்களது தனிப்பட்ட செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
பரிகாரம்: தெரு நாய்களுக்கு உணவளிக்கவும்
விருச்சிகம்:
வணிக உற்பத்தி தொடர்பான விஷயங்களை இன்று நிலுவையில் வைப்பதை தவிர்க்கவும். மற்றபடி தொழில், மற்றும் வியாபாரம் இன்று சிறப்பாக இருக்கும். பணியாளர்கள் இன்று தங்களது வேலையிடத்தில் குழு உணர்வுடன் பணியாற்றுவது நன்மைகளை தரும். நிலையான சொத்துக்கள் தொடர்பான பணிகளில் ஏற்றம் உண்டாகும்.
பரிகாரம்: மாடுகளை வைத்து பராமரிக்க உங்களால் முடிந்த நிதி உதவி செய்யுங்கள்
தனுசு:
தொழில்முறை உறவுகள் மற்றும் சக பணியாளர்களை மதிக்க வேண்டும். முக்கிய வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க பாருங்கள். நிதி விஷயங்களில் தெளிவாக இருங்கள். உங்களது செயல்திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் நேர்மையை கடைபிடிக்கவும். வியாபாரிகளுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: லட்சுமி தேவியை வழிபடுங்கள்
மகரம்:
உங்கள் தொழிலில் இன்று உற்சாகம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். பொருளாதார விஷயங்களில் சுறுசுறுப்பு இருக்கும். இன்று நீங்கள் வெற்றி பெற்ற உணர்வு ஏற்பட்டு நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். எனினும் உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும்.அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்: சிவனை கரு ஊமத்தை மலர்களால் அர்ச்சித்து வழிபடுங்கள்
மீனம்:
வியாபாரிகள் தங்கள் தொழிலில் இன்று வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவார்கள். வியாபார விஷயங்களில் உறவுமுறையினரை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முடிவுகள் இன்று கிடைக்கும். கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று தேவையான உதவிகளை செய்யுங்கள்