மேஷம்:
இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமையக்கூடும். வியாபார நடவடிக்கைகளில் முன்னேற்றம் அடைவீர்கள். சில நேரங்களில் உங்களின் கடின உழைப்பு வெற்றியைக் கொடுக்காவிடிலும் கவலை வேண்டாம். நிச்சயம் நல்லதே நடக்கும். அதிகாரிகளுடான நல்லுறவால் அரசாங்க டென்டர் அல்லது அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பெரிய ஆர்டரைப் பெறுவீர்கள்.
பரிகாரம்:- சிவலிங்கத்தின் மீது நீர் அர்ச்சனை செய்யுங்கள்.
ரிஷபம்:
இன்றைக்கு எதிலும் அவசரம் வேண்டாம். சொத்துத் தொடர்பான ஒப்பந்தங்களை முடிக்கப் போகிறீர்கள் என்றால், முதலில் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். உங்களின் பெரும்பாலான நேரம் மார்க்கெட்டிங் தொடர்பான வேலைகளில் செலவிடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக வேலைப்பளுவால் மன உளைச்சலை எதிர்க்கொள்ள நேரிடும்.
பரிகாரம்: மஞ்சள் நிறப் பொருளை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளவும்.
மிதுனம்:
இன்றைக்கு வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஊழியர்களிடையே எதிர்பாரதவிதமாக பரஸ்பர பிளவு ஏற்படும் என்பதால் உங்களின் வேலையைப் பாதிக்கும். நிதானத்துடன் செயல்படுங்கள். நீங்கள் இன்றைக்கு உங்களுக்கான பணி ஆர்டர்களை தொலைபேசி மூலம் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்; தொடர்ந்து சனிபகவானை வழிபடுங்கள்.
கடகம்:
வணிகம் தொடர்பான நடவடிக்கைகளில் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்று தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரில் ஏற்படும் சந்திப்பினாலோ ஒரு சில நேர்மறையான விவாதங்களை நீங்கள் மேற்கொள்ள நேரிடும். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் ஒன்று கூடுவது தொடர்பான நிகழ்ச்சி இருக்கும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.
கன்னி:
இன்றைக்கு மோசமான நிலையை சந்திக்கக்கூடும். எந்தவொரு புதிய வேலையையும் தொடங்கினாலும் அவசரம் வேண்டாம். நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் இருக்கவும். உங்களின் பார்டனருடன் விட்டுக்கொடுத்து பணிகளை மேற்கொள்ளுங்கள். இல்லையெனும் பட்சத்தில் தேவையில்லாத தகராறுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
பரிகாரம்: தொடர்ந்து சனிபகவானை வழிபடுங்கள்.
விருச்சிகம்:
இன்றைக்கு நிதானம் தேவை. அலட்சியம் காட்டினால் சிக்கல் உண்டாகும். பண முதலீடு தொடர்பான வேலைகளில், யாருடைய வார்த்தைகளையும் கேட்டு முடிவு எடுக்காதீர்கள். சொந்தமாக யோசிப்பதோடு, முழுமையான விசாரணையை மேற்கொள்ளவும். உத்தியோகத்தில் நல்ல இலக்கை அடைய வேண்டும் என்றால் கடின உழைப்பு அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபடவும்.
தனுசு:
இன்றைக்கு நல்ல செய்தி கிடைக்கும் நாள். உங்களது வாழ்க்கையில் எந்தவொரு வணிக முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக, அனுபவம் வாய்ந்த நபர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக அமையும் என்பதால் நிதானம் தேவை. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு திடீரென வேலை தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.
பரிகாரம்; காளியை வழிபடுங்கள்.
மகரம்:
இன்றைக்கு எச்சரிக்கையுடன் இல்லாவிடில் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். வணிக சூழ்நிலைகள் எவ்வித இடையூறும் இன்றி உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். தவறவிட்டு விடாதீர்கள். தொழில்நிலையில் மேன்மைக் காண்பீர்கள். பணியில் உள்ள சக ஊழியர்கள் உங்களைக் கண்டு பொறாமைக் கொள்வார்கள். இதனால் பல பிரச்சனைகளில் நீங்கள் சிக்கிக்கொள்ள நேரிடும்.
பரிகாரம்; விநாயகரை வழிபடவும்.
கும்பம்:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். எந்தவொரு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கோ அல்லது புதிய வேலையை எவ்வித அச்சமும் இன்றி தொடங்கலாம். இருந்தப் போதும் பங்கு முதலீடுகளில் சில சறுக்கல்கள் ஏற்படும். முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். மாத சம்பளம் வாங்குவோர் நல்ல செய்தி அல்லது போனஸைப் பெறக்கூடிய நாள் இன்று.
பரிகாரம்; நீல நிற பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
மீனம்:
இன்றைக்கு எந்தவொரு முக்கியமான முடிவுகளையும் எடுப்பதற்கு முன்னதாக அனுபவமிக்க நபர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும். வணிகர்களுக்கு சாதகமான சூழல் அமையாது. அரசு வேலையில் இருப்பவர்கள் தங்களது பணியில் எந்தவித அலட்சியமும் காட்டாதீர்கள். பொறுமை மற்றும் நிதானம் அவசியம்
பரிகாரம்: எப்பொழுது வெளியில் சென்றாலும் பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறவும்.