Rasi Palan for Mesham |மேஷம் : இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
Rasi Palan for Reshabam | ரிஷபம்: இன்று குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
Rasi Palan for Midunam | மிதுனம்: இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
Rasi Palan for Kadagam | கடகம்: இன்று எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். மனோ தைரியம் கூடும். ராசிநாதன் சந்திரன் சஞ்சாரம் எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். ஆனாலும் கடும் முயற்சிக்குப் பின் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
Rasi Palan for Viruchigam | விருச்சிகம்: இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் மன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பீர்கள். மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
Rasi Palan for Magaram | மகரம்: இன்று முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
Rasi Palan for Kumbam | கும்பம்: இன்று குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
Rasi Palan for Meenam | மீனம்: இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். குடும்பத்தினர் தொடர்பான கவலைகள் நீங்கும். அவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தாய்வழி சொத்துக்கள் சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9