புத்தாண்டில் நம் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் நடைபெற போகின்றன என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கும். அதே சமயம், வருடத்தின் முதல் நாளான இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். மேஷம்: இன்றைக்கு உங்களுடைய ஒட்டுமொத்த ஆற்றல் மேம்பட்டதாக இருக்கும். இன்று சோம்பல் முறித்து, வேலையில் துரிதமாக செயல்படுவீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செலினைட் ரிஷபம்: ஒரு செயலை செய்து முடிப்பது என்று நீங்கள் தீர்மானித்துவிட்டால், அதை நீங்கள் முன்னெடுத்துச் சென்று நிறைவு செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்காது. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்து மிதுனம்: நீங்கள் வளர்ந்து வரும் தொழிலதிபர் என்றால் உங்களுக்கான புதிய பணிகள் கிடைக்கும். சட்ட ரீதியான ஆலோசனைகள் தற்சமயம் குழப்பத்தை ஏற்படுத்தும். உங்கள் உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்தவும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீலமணிக்கல் கடகம்: குடும்பத்தில் இருந்து கிடைக்கும் திடீர் ஆதரவு உங்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும். அடுத்த சில நாட்களுக்கு உங்கள் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். தக்க தருணத்தில் கிடைக்கும் அறிவுரை உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய விளக்கு சிம்மம்: இன்றைய தினம் உங்கள் மனதில் தெளிவு பிறக்கும் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். நிதி சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வர இருக்கின்றன. புதிய முதலீடுகளை தற்போது மேற்கொள்ளலாம். உங்கள் பணிகளுக்கு பாராட்டு கிடைக்க இருக்கிறது. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உறை கன்னி: உங்களுக்கான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்று நீங்கள் சந்திக்கும் புதிய நபர் ஒருவர் உங்களின் நீண்டகால நண்பராக மாற இருக்கிறார். ரிலாக்ஸ் அடையவும், புத்துணர்ச்சி பெறவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவார்ட்ஸ் துலாம்: நீண்ட பயணம் செல்ல இருக்கிறீர்கள். மனதில் மிக அதிகமான விஷயங்களை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், எதை முதலில் செய்ய வேண்டும் என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் வரும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீள நிற கல் விருச்சிகம்: சில நாட்கள் உங்களுக்கு மந்தமானதாக இருக்கும். அதுபோன்ற அனுபவம் இன்றைக்கும் ஏற்படும். இன்று நீங்கள் எவ்வளவு தான் கடினமாக முயற்சி செய்தாலும், நிலையற்ற தன்மை காரணமாக நீங்கள் பின்னோக்கி வருவீர்கள். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காப்பர் பவுல் தனுசு: ஒன்றுகூடி சந்திப்பதற்கான வாய்ப்பு நெருங்கி வருகிறது. தொலைதூரத்தில் இருக்கக் கூடியவர்கள் உங்களுடன் நெருங்கிய பந்தம் ஏற்படுத்த நினைக்கின்றனர். இன்றைய தினம் ஷாப்பிங் செய்வதில் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காட்சிப்பொருள் மகரம்: நிலுவையில் உள்ள விஷயங்களுக்கு தீர்வு காணுவதற்கான சிறப்பான நாளாகும். உங்கள் ஆழ்மன எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நினைத்தாலும், அதற்கான சரியான நபர் கிடைக்கவில்லை. உணர்வு ரீதியாக முடங்கி இருப்பீர்கள். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பசை குச்சி கும்பம்: உங்கள் பலம் என்னவென்பதை சிலர் சுட்டிக்காட்ட இருக்கின்றனர். பணியிடத்தில் அதை நீங்கள் சாதுரியமாக பயன்படுத்திக் கொள்ளலாம். கேமரா எதிர்கொள்ள தயங்குபவர் என்றாலும் இன்று வீடியோ பதிவில் உங்கள் முகம் காட்டலாம். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வளர்ச்சிக்கான அறிகுறி மீனம்: உங்களுக்கான பணிச்சுமை அதிகரிக்க இருக்கிறது. அதை நிறைவு செய்ய பிறரின் உதவி தேவைப்படும். நீங்கள் நண்பராக கருதிய நபர், அவருடைய உண்மையான உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். தியானம் செய்வது நல்லது. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காந்தம்