ரிஷபம்:
திடீர் செலவுகள் அதிகரிக்கும், அதனால் நீங்கள் திட்டமிட்ட நிதி நிலைமையில் குழப்பம் அடையலாம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். காதலிப்பவர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.
பரிகாரம் – துர்க்கையம்மன் கோவிலில் துர்க்கை கவசம் பாராயணம் செய்யவும்.
கடகம்:
சுபகாரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். இதனால் கடன் வாங்கும் நிலை கூட ஏற்படலாம். தெரியாதவர்களை சந்திப்பீர்கள். நிறைவேறாமல் இருக்கும் வேலைகளை முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அலுவலகத்தில், உயரதிகாரிகளால் நல்ல பலன்கள் உண்டாகும்.
பரிகாரம் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இனிப்புகள் வைத்து வழிபடவும்
விருச்சிகம்:
கல்வி தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும். யாருடனாவது கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் பேச்சில் பணிவாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். அவசரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். பணம் ஈட்ட கூடுதல் முயற்சிகள் தேவை.
பரிகாரம் – தினமும் 7 முறை சுந்தரகாண்டம் அல்லது ஹனுமான் சாலிசாவைப் பாராயணம் செய்யவும்