ரிஷபம்:
இயந்திரம் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் இன்று ஒப்பந்தம் அல்லது ஆர்டரை பெற வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று தங்கள் வேலை தொடர்பாக சில நல்ல செய்திகளை பெறலாம். வணிகத்தில் இருப்பவர்கள் தங்கள் இலக்குகளை அடைவது கடினம் என்று நினைக்கலாம். ஆனால் கடின உழைப்பு மூலம் சிறந்த பலன்களை பெறலாம்.
பரிகாரம் - ஏழை நபருக்கு பழங்களை தானம் செய்யுங்கள்
மிதுனம்:
வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இன்று சில புதிய முன்மொழிவுகள் கிடைக்கும். கடின உழைப்பின் சரியான பலன்களை இன்று பெறலாம். கூட்டாண்மை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று வணிகத்தில் நடக்கும் அனைத்து செயலையும் கண்காணிப்பில் வைப்பது மிக முக்கியம். பணியிடங்களில் கவனமாக இல்லாவிட்டால் அதிகாரிகளின் கண்டனத்தை சந்திக்க நேரிடும்.
பரிகாரம் - விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும்
கடகம்:
அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று வியாபாரத்தில் வேலை அதிகமாக இருக்கும். எனவே உங்கள் வேலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தை பெருமளவு குறைக்க உதவும். சுற்றி இருக்கும் புதிய நபர்களுடன் பழகுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பரிகாரம் - ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும்
சிம்மம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வணிக தளத்தில் பணிபுரிவோர் தங்கள் பணியில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம். பப்ளிக் ரிலேஷன்ஸ் உங்களுக்காக புதிய வணிக ஆதாரங்களை உருவாக்க முடியும், எனவே முடிந்தவரை மக்களுடன் தொடர்பில் இருங்கள்.
பரிகாரம் - விஷ்ணு பெருமானை வழிபடவும்
கன்னி:
வியாபார நடவடிக்கைகளில் இன்று அதிக முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. தனிப்பட்ட தொடர்புகள் உங்களுக்கு இன்று சில லாபகரமான சூழல்களை உருவாக்கும், எனவே முடிந்தவரை சுற்றத்தார் உட்பட பலருடன் தொடர்பில் இருங்கள். சொத்து தொடர்பான முக்கிய ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பரிகாரம் - சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்யவும்
துலாம்:
இன்று மற்றொரு நபரின் ஆலோசனை உங்களுக்கு சிக்கல்களை உருவாக்கலாம். எனவே எல்லா விஷயங்களிலும் நீங்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. இன்று மார்க்கெட்டிங் சார்ந்த பணிகளை ஒத்திவைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று கிடைக்கும் சிறப்பு உரிமைகள் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.
பரிகாரம் - சூரிய பகவானுக்கு தண்ணீர் வைத்து வழிபடவும்
மகரம்:
இன்று உங்களது கடின உழைப்பாலும் திறமையாலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவீர்கள். ஆனால் இன்று சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. வீடியோ மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பான செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துங்கள். ஊழியர்கள் இன்று தங்கள் வேலையை மிகவும் கவனமாக செய்யாவிட்டால் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
பரிகாரம் - பசுவிற்கு தீவனம் கொடுக்கவும்
கும்பம்:
இன்று உங்களுக்கு பணிச்சுமை கூடினாலும் சிறந்த முறையில் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் இன்டர்னல் சிஸ்டமில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது. நீங்கள் அதை மேலிடத்திற்கு எடுத்து காட்டுவதன் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.
பரிகாரம் - அருகில் வசிக்கும் ஏழை குடும்பத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும்