மேஷம்:
இன்று பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பல துறைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். புதிய வேலைகளை இன்று தைரியமாக தொடங்கலாம். உடன் பணிபுரிபவர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய விவாதங்களில் ஈடுபடுவது உங்களது போட்டி திறனை அதிகரிக்கலாம். வியாபாரிகள் தங்கள் தொழிலில் வேகம் காட்ட வேண்டும்.
பரிகாரம் - வீட்டை விட்டு வெளியேறும் முன் பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறவும்
ரிஷபம்:
இன்று சில விஷயங்களில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட விஷயங்களில் இன்று நிதானமாக இருக்க வேண்டும். பொருளாதார விஷயங்களில் இன்று சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். பணியில் பொறுமை வேண்டும். தேவையான முடிவுகளை எடுப்பதில் தாமதத்தை தவிர்க்கவும்.
பரிகாரம் - இன்று கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபடவும்
மிதுனம்:
தொழில் செய்வோருக்கு பார்ட்னர்ஷிப் விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கொடுக்கப்படும் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பொருளாதார பலன்கள் சிறப்பாக இருக்கும். வேலையில் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுக்கு இன்று தலைமைத்துவ உணர்வு அதிகரிக்கும்.
பரிகாரம் - சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவும்
கடகம்:
இன்று முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருங்கள். வெளியாட்களை எளிதில் நம்பி விடாதீர்கள். முக்கிய ஒப்பந்தங்களில் பொறுமை அதிகம் வேண்டும். முடிவுகளை எடுப்பதில் கவனமாக இருக்கவும். இன்று சக ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு இயல்பாக செல்லும்.
பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்
சிம்மம்:
வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பணிகளை விரைவாக செய்யுங்கள். தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக இன்று உங்களது பலம் நிலைத்திருக்கும். வேலையில் நல்ல சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் லாப சதவீதம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று புல்லாங்குழல் வைத்து அர்ச்சனை செய்யுங்கள்
கன்னி:
அலுவலக வேலைகளில் இன்று தீவிரம் காட்டுங்கள். நெருங்கிய மற்றும் சக பணியாளர்கள் உங்களுக்கு இன்று உதவியாக இருப்பார்கள். முதலீட்டு திட்டத்தை இன்று ஒத்தி வைக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பரம்பரை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று லாபம் நன்றாக இருக்கும்.
பரிகாரம் - மஞ்சள் நிற உணவு பொருட்களை தானம் செய்யுங்கள்
துலாம்:
இன்று உங்களுக்கு எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபார நடவடிக்கைகள் வேகமெடுக்கும். வியாபார நடவடிக்கைகள் மற்றும் வேலைகளில் அலட்சியத்தைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான யோசனைகள் இன்று அதிகரிக்கும்.
பரிகாரம் - பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுங்கள்
விருச்சிகம்:
நிதி தொடர்பான விஷயங்கள் இன்று சிறப்பாக இருக்கும், சேமிப்பு அதிகாரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் பலனளிக்கும். செல்வம் பெருகும். ஊழியர்களுக்கு பணியிடத்தில் நேர்மறை சூழல் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இன்று லாப சதவீதம் நன்றாக இருக்கும்.
பரிகாரம் - பைரவர் கோவிலில் தேங்காய் வைத்து வழிபடவும்
தனுசு:
வியாபாரிகளுக்கு அவர்களது தொழில் சாதனைகள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிஸ்டம் மேனேஜ்மென்ட் வலுவாக இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த பொருளாதார பிரச்சினைகள் இன்று தீரும். வியாபாரம் சரியான திசையில் முன்னேறும். புதிய முயற்சிகள் அல்லது திட்டங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம் - சிவபெருமானுக்கு நீரால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்
மகரம்:
இன்று கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும், இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். பணியிடத்தில் அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். முதலீடு விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார நடவடிக்கைகளில் விழிப்போடு ஈடுபடுங்கள். வியாபாரிகள் தொழில் விரிவாக்கத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம் - அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்
கும்பம்:
அலுவலக பணிகளில் இன்று எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தனிப்பட்ட செயல்திறனில் கவனம் செலுத்தினால் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகளுக்கிடையே வெற்றியை நிலைநாட்டுவீர்கள். முக்கிய நபர்களுடனான சந்திப்பு தொழில் சார்ந்த இலக்குகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவும். வியாபாரம் வலுவடையும்.
பரிகாரம் - ராமர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்
மீனம்:
ஊழியர்கள் பணியிடத்தில் தங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். வியாபாரத்தில் கிடைக்கும் ஆதரவு லாப சதவீதத்தை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக இருந்தால் நேர்மறை பலன்கள் அதிகமாக இருக்கும். மேலும் உங்களுக்கு இருக்கும் தடைகள் தானாக விலகும்.
பரிகாரம் - அன்னை சரஸ்வதிக்கு வெண்ணிற மலர் மாலை அணிவித்து வழிபடுங்கள்