மிதுனம்:
இந்த நேரத்தில், வணிகத்தை அதிகரிக்க மக்கள் தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஊடகங்கள் மற்றும் தொலைபேசி மூலம் முக்கியமான ஒப்பந்தங்களை முடிவு செய்யலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது, எனவே உங்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படவும்.
பரிகாரம்: யோகா மற்றும் பிராணாயாமம் பயிற்சி செய்யுங்கள்.
விருச்சிகம்:
அலுவலகத்தில் செயல்பாடுகள் கொஞ்சம் மந்தமாக இருக்கும். பொருளாதார நிலை வலுப்பெறும். வேலையில் இருப்பவர்கள் மாற்றம் தொடர்பான சாதகமான சில தகவல்களைப் பெறுவார்கள். மார்க்கெட்டிங் மற்றும் நிதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு பிசியான நாளாக இருக்கும்.
பரிகாரம்: விநாயகருக்கு லட்டுகளை படைக்கவும்.
மகரம்:
வியாபார ரீதியான செயல்பாடுகள் சாதாரணமாக செல்லும். உங்கள் பெரும்பாலான வேலைகள் தொலைபேசியிலேயே செய்து முடிப்பீர்கள். பங்குகள் மற்றும் பங்குச் சந்தை தொடர்பான வணிகங்கள் நல்ல லாபம் ஈட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவை வளர்க்க வேண்டும்.
பரிகாரம்: சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவும்.
மீனம்:
இன்று, உங்களின் முழு கவனத்தையும் வேலையின் முன்னேற்றத்தில் மட்டும் செலுத்துங்கள். திட்டவட்டமாக செயல்படுவது வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். வணிகத்தை விரிவாக்க வேண்டும் என்ற திட்டங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் நல்ல தீர்வு காண்பீர்கள்.
பரிகாரம்: யோகா மற்றும் பிராணாயாமம் மூச்சு பயிற்சி செய்யுங்கள்.