மேஷம்:
இன்று வணிகர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ள விரும்பும் சில சிறப்பு ஒப்பந்தங்கள் இன்று இறுதியாகும். வீண் செலவுகள் கூடும் என்பதால் தேவைக்கு மட்டும் செலவழியுங்கள். இன்று உங்கள் உடல் நலத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
பரிகாரம்: பசு மாடுகளுக்கு பச்சை புல் அல்லது கீரை உணவாக கொடுங்கள்
ரிஷபம்:
ஏற்கனவே வாங்கிய கடன் அல்லது தற்போது தேவைக்கான நிதி நெருக்கடிபற்றிய கவலைகள் இன்று அதிகரிக்கலாம். எனினும் இன்று உங்களுக்கு சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரிகளின் பொருளாதார நிலையில் இன்று முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்
சிம்மம்:
ஊழியர்களுக்கு புதிய வேலை மற்றும் வியாபாரிகளுக்கு புதிய வியாபார ஒப்பந்தங்கள் இன்று வரலாம். பிரச்சனைகளை இன்று எளிதில் சமாளித்து மீண்டு வருவீர்கள். வேலைகளை தொடங்கும் முன் சிந்தித்து செயல்படுங்கள். அதே போல அதிக கவனமாக செயல்படுவது விரைவில் வேலைகளை முடிக்க உதவும்.
பரிகாரம்: தெரு நாய்களுக்கு உணவளிக்கவும்
கன்னி:
நீங்கள் இதுநாள் வரை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் திட்டங்கள் மற்றும் வேலைகளில் இன்று சிலகுறுக்கீடுகள் இருக்கலாம். யாருடனும் விவாதம் அல்லது மோதலை தவிர்க்கவும். இன்று புதிய முதலீட்டை தவிர்ப்பது நல்லது. எந்தவொரு நிதி பரிவர்த்தனைக்கு முன்பம் அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.
பரிகாரம்: மாற்றுத்திறனாளி நபர்களுக்கு உதவிகளை செய்யுங்கள்
துலாம்:
ஊழியர்களுக்கு இன்று பணியிடத்தில் கோபம், பதற்றம் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணம் சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படும்.
பரிகாரம்: எறும்புகளுக்கு தீனியாக வைக்கும் மாவில் சர்க்கரை சேர்க்கவும்
மகரம்:
நீங்கள் எந்த ஒரு நபரிடமோ, வங்கியிலோ, நிறுவனத்திலோ கடன் வாங்க விரும்பினால் அதை இன்று செய்யாதீர்கள். ஏனென்றால் இன்று நீங்கள் கடன் வாங்கினால் அதை அடைப்பது கடினம். பழைய நண்பர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு இன்று கூடும்.
பரிகாரம்: அன்னை சரஸ்வதிக்கு வெண்ணிற மலர் மாலை அணிவிக்கவும்
கும்பம்:
இன்று உங்களது முடிவெடுக்கும் திறன்களினால் சிறப்பான பலனை பெறலாம். தடைபட்டிருந்த பணிகள் இன்று முடிவடையும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் அதை திறந்த மனதுடன் செய்யுங்கள், எதிர்காலத்தில் அதற்கான நீங்கள் முழு பலனைப் பெறுவீர்கள். இதுநாள் வரை இருந்த பொருளாதார பிரச்சனைகள் தீரும்.
பரிகாரம்: ராமர் கோவிலுக்கு சென்று வழிபடவும்