ரிஷபம்:
தேவையற்ற மாற்றங்களால் எல்லாம் முடிந்து விட்டது என்ற சிந்தனை உங்களுக்கு வரக் கூடும். உங்களுக்கான அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க வேண்டாம். முக்கியமான விஷயங்களை மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டியிருக்கும். தவறுகளை உற்று நோக்கி பாடம் படிக்கவும்.
பரிகாரம் - துர்க்கை அம்மன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றவும்.
மிதுனம்:
இன்றைய தினம் சமரசங்களை செய்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலமாக வெற்றி கிடைக்கும். ஆனால், பிறருடைய ஆலோசனைகளை மனதில் வைத்துக் கொள்ளவும். கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். முயற்சித்தால் எந்தவொரு சூழலையும் மாற்றி அமைக்கலாம்.
பரிகாரம் - ஏழை மனிதர்களுக்கு வெள்ளை நிற பொருட்கள் கொடுக்கவும்.
சிம்மம்:
உங்களை சுற்றியிலும் சில குழப்பங்கள் ஏற்படக் கூடும். இதனால் நீங்கள் கோபம் அடைவீர்கள். இருப்பினும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். இன்றைக்கு முக்கிய வேலைகளை ஒத்திவைக்கவும். எண்ண ஓட்டங்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக பெரும் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.
பரிகாரம் - நாய்க்கு இனிப்பு வழங்கவும்.
துலாம்:
உங்கள் மனதில் அமைதியின்மை நிலவும். எண்ணற்ற விஷயங்களை எண்ணி குழப்பம் அடைவீர்கள். எதிர்மறை சிந்தனைகளில் இருந்து விலகி இருக்கவும். உறவுகளுக்குள் தவறான புரிதல் ஏற்படலாம். உங்கள் முடிவுகள் குறித்து பிறருக்கு புரிய வைப்பது கடினமாக இருக்கலாம்.
பரிகாரம் - எறும்புகளுக்கு இனிப்பு கலந்த மாவு வைக்கவும்.