மேஷம்
செய்யும் வேலைகளில் கூடுதல் முயற்சி தேவை. புகழ் அதிகரிக்கும். தொழில் செய்வோருக்கு தேவையான ஒத்துழைப்புகள் கிடைக்கும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேர்மறையான சூழல் நிலவும். திடீரென ஏற்படும் தடைகள் தானாகவே விலகிவிடும்.
பரிகாரம் - சரஸ்வதி தேவிக்கு வெள்ளை மலர்களை வைத்து வழிபட வேண்டும்.
ரிஷபம்
அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயத்தில் அதிக கவனம் தேவை. பொருளாதார ரீதியாக அதிர்ஷ்டம் உண்டாகும். அனைவரிடமிருந்தும் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். தொழிலில் மிக நல்லவிதமாக அமையும்.
பரிகாரம் - ராமர் கோவிலுக்கு கொடியை பரிசளிக்கவும்
மிதுனம்
கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். பழைய விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது. முதலீடு செய்வதில் ஆர்வம் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை. தொழிலை விரிவுபடுத்துவதில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம் - ஆஞ்சநேயர் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
கடகம்
அலுவலக வேலையில் புதிய சாதனைகளை மேற்கொள்வீர்கள். மங்களகரமான நாளாக அமையும். தொழில் மங்கலகரமாக இருக்கும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் சரி செய்யப்படும். தைரியம் அதிகரிக்கும். புதிய குறிக்கோளை மனதில் வைத்து செயல்படுவீர்கள். புதிய வேலைகள் செய்வதில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம் - சிவனுக்கு நீரை காணிக்கையாக வைத்து வழிபட வேண்டும்.
சிம்மம்
பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். சேமிப்பு அதிகரிக்கும். சில முயற்சிகள் எடுத்து கொடுத்த வேலையை செய்து முடிப்பீர்கள். சொத்து சேர்ப்பதில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இன்று லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - பைரவர் கோவிலுக்கு தேங்காய் காணிக்கை எடுத்து வழிபட வேண்டும்.
கன்னி
தொழில் நன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளில் வேகம் உண்டாகும். சரக்குகளை விற்பதும் வாங்குவதும் லாபத்தை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணி செய்பவருக்கு பணி நிமித்தமாக பயணம் செய்ய வேண்டிய சூழல் உண்டாகலாம். வேலைகளை தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம் - பசு மாட்டிற்கு பசுந்தீவனத்தை உணவளிக்க வேண்டும்.
துலாம்
அலுவலகத்தில் சற்று கவனமுடன் சிரத்தை எடுத்து வேலை பார்க்க வேண்டும். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவரிடம் இருந்து உதவிகளை கேட்டு பெறுவது நல்லது. தேவையற்ற முதலீடுகளை தவிர்க்க வேண்டும். தொழில் செய்பவருக்கு நல்ல நாளாக அமையும். குடும்பத்தினராக இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் மூதாதையர் சொத்துக்களின் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும்.
பரிகாரம் - மஞ்சள் உணவு பொருட்களை தானம் அளிக்க வேண்டும்
மகரம்
முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தொழில் செய்பவருக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தலைமை பண்பு அதிகரிக்கும். பொறுப்புகளை பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருப்பீர்கள்.
பரிகாரம் – சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மீனம்
பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வேலையில் நன்றாக செயல்படுவீர்கள். புதிய வேலைகளை துவங்குவதற்கு இன்று ஏற்ற நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய போட்டிகள் உண்டாகும். தொழில் செய்பவருக்கு இன்று புதிய உத்வேகம் உண்டாகும்.
பரிகாரம் - வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது பெரியவர்களிடம் ஆசிப் பெற்று செல்ல வேண்டும்.