மேஷம்:
இன்று சில புதிய சாதனைகளை நீங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்று உங்களுக்கான லாப விகிதம் குறைவாகவே இருக்கும். வேலையில் இருப்பவர்கள் பணியிடத்தில் இன்று சிறிதளவு கூட அலட்சியம் காட்ட கூடாது. வேலை சார்ந்த எந்தவொரு சிறிய பயணமும் உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் வாய்ப்புகளை பெற்று தரும்.
பரிகாரம்: எறும்புகளுக்கு தீனியாக அரிசி மாவு வைக்கவும்
ரிஷபம்:
இன்று சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவற்றுக்கு புத்திசாலித்தனமாக செயல்பட்டு தீர்வு காண்பீர்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இன்று வலுவாக இருப்பதால், பணியிடத்தில் ஊழியர்கள் தங்கள் வேலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: மஞ்சள் நிற பொருட்களை பிறருக்கு தானம் செய்யுங்கள்
மிதுனம்:
வியாபாரிகளுக்கு இன்று மக்கள் தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊடகங்கள் மற்றும் தொலைபேசி மூலம் இன்று முக்கியமான ஒப்பந்தங்களை பெற கூடும். வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதால் வேலைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள்.
பரிகாரம்: விநாயக பெருமானை வழிபடுங்கள்
சிம்மம்:
வியாபாரிகள் இன்று தங்களது வணிக நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லாவிட்டால் இழப்புகளை சந்திக்க கூடும். மேலும் உங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்றால் பணியிடத்தில் உங்களது நற்பெயர் உயரும்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுங்கள்
கன்னி:
வியாபாரிகளுக்கு இன்று பொறுப்புகள் மற்றும் பணிச்சுமை கூடும். எனவே தனிப்பட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை விட்டு உங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேலை செய்பவர்கள் தங்கள் விருப்பப்படி ட்ரான்ஸ்ஃரை பெறுவார்கள். உங்கள் இலக்கை நோக்கி செல்ல திட்டமிட்டால் விழிப்புடன் செயல்படுங்கள்.
பரிகாரம்: விநாயகருக்கு லட்டுகளை வைத்து வழிபடுங்கள்
மகரம்:
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று தொழில் போட்டிகளை சந்திக்க நேரிடும். எனினும் வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். எனவே உங்கள் தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். கடின உழைப்பால் உங்கள் வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். இன்று உங்களுக்கான லாபவிகிதம் அதிகரிக்கும்.
பரிகாரம்: மஞ்சள் நிற பொருட்களை இன்று தானம் செய்யுங்கள்
கும்பம்:
இன்று உங்களது வியாபார நடவடிக்கைகள் சீராக இருக்கும். உங்களின் திறமை மூலம் இன்று சில சிறப்பு ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று உங்களது பணிகளில் இடையூறுகள் ஏற்பட்டாலும் இறுதியில் பிரச்சனை தீரும். எனினும் சில அதிகாரிகளின் உதவி உங்களுக்கு தேவைப்படும். அலுவலக நேரம் இன்று உங்களுக்கு அமைதியாக செல்லும்.
பரிகாரம்: சிவலிங்கத்திற்கு தண்ணீர் அபிஷேகம் செய்யுங்கள்
மீனம்:
வியாபாரிகள் இன்று தொழில் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சீக்கிரம் வெற்றி பெற வேண்டும் அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தவறான பாதைகளை தேர்வு செய்யாதீர்கள். கடின உழைப்பு மூலமே இன்று முக்கிய பணிகளை முடிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுங்கள்