மிதுனம்:
இன்று பணியிடத்தில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு முக்கிய ஆவணத்தை இழக்க நேரிடும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஆன்லைன் மோசடியில் சிக்காமல் இருக்க உஷாராக இருங்கள். முதலீடு செய்வதாக இருந்தால் உரிய நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.
பரிகாரம்: பைரவர் கோவிலில் தேங்காய் வைத்து வழிபடவும்
துலாம்:
போதிய அளவு பணம் இன்று உங்களுக்கு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களை வீழ்த்த வேண்டும் என்ற எதிரிகளின் எண்ணம் வெற்றியடையாது. அருகே மற்றும் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள திட்டமிடலாம். பல நாட்களாக நீடித்து வந்த முக்கிய பிரச்சனை இன்று தீர்க்கப்படும்.
பரிகாரம்: அரசமரத்திற்கு தண்ணீர் ஊற்றவும்
விருச்சிகம்:
இன்று லாபமும், பணம் வருவதற்கான வழியும் தெளிவாக இருக்கும். பங்குச் சந்தையில் இன்று முதலீடு செய்வது லாபத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுங்கள். எதிர்காலத்தில் நன்மைகளை பெறுவீர்கள்.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்யவும்