ரிஷபம்:
பணம் சார்ந்த வேலைகளை மிகவும் கவனமுடன் செய்யுங்கள். சிறிய கவனக்குறைவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தலாம். இயந்திரங்கள் தொடர்பான வேலைகளில் ஒப்பந்தம் அல்லது ஆர்டரை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலை தொடர்பான சில நல்ல செய்திகளை இன்று பெறலாம்.
பரிகாரம் - சிவ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்
மிதுனம்:
இன்று வியாபாரிகளுக்கு வேலை அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் தங்கள் வேலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தை பெருமளவு குறைக்க உதவும். வேலைகளில் நீங்கள் செய்யும் சிறு தவறுகள் பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். இதனால் அதிகாரிகளின் கண்டனத்தை சந்திக்க நேரிடும்.
பரிகாரம் - சிவலிங்கத்தின் முன் தண்ணீர் வைத்து வழிபடுங்கள்
கடகம்:
இன்று கடின உழைப்பிற்கு ஏற்ற சரியான பலன்கள் கிடைக்கும். கூட்டாண்மை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒவ்வொரு செயலையும் தங்களின் கண்காணிப்பின் கீழ் வைப்பது மிகவும் முக்கியம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரிகள் இன்று தங்கள் வணிகத்தில் புதிய முன்மொழிவுகளை பெறுவார்கள்.
பரிகாரம் - தேவைப்படும் ஏழைகளுக்கு உதவுங்கள்
சிம்மம்:
வியாபாரிகள் இன்று தாங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. குறிப்பிட்ட சில தனிப்பட்ட தொடர்புகள் வியாபாரிகளுக்கு லாபகர சூழலை உருவாக்கும், எனவே முடிந்தவரை மக்களுடன் தொடர்பில் இருங்கள். சொத்து ரீதியான முக்கிய ஒப்பந்தங்களை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
பரிகாரம் - விஷ்ணு பெருமானை வழிபடவும்
துலாம்:
புதிய வேலைகளை தொடங்க இன்று சரியான நாள் அல்ல. எனவே தற்போதைய வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. இன்று எந்த ஒரு முடிவை எடுக்கும் முன் அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரி மற்றும் அதிகாரிகளுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும்.
பரிகாரம் - சூரியனுக்கு நீர் வைத்து படைக்கவும்
விருச்சிகம்:
இன்று மற்றொரு நபரின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே இன்று எதிலும் சுயமாக முடிவெடுப்பது நல்லது. இன்று மார்க்கெட்டிங் பணிகளை ஒத்திவைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று சிறப்பு சலுகைகளை பெறுவதன் மூலம் மகிழ்ச்சி அடைவார்கள்.
பரிகாரம் - யோகா பிராணயாமா பயிற்சி செய்யவும்
தனுசு:
தொழில் துறையில் உள்ளவர்கள் கடின உழைப்பு மற்றும் திறமையால் இலக்கை அடைவார்கள். வியாபாரிகள் மார்க்கெட்டிங் தொடர்பான செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையை மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லை என்றால் சில தவறுகள் நடந்து உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
பரிகாரம் - மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்
மீனம்:
வியாபாரத்தில் எடுக்கப்பட்ட சில உறுதியான மற்றும் தீவிர முடிவுகள் வியாபாரிகளுக்கு இன்று சாதக பலன்களை தரும். இன்று உங்களை நிரூபிக்க, நிறைய போராட்டமும் கடின உழைப்பும் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பணிச்சுமையை கூடினாலும், சிறந்த முறையில் செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடவும்