மிதுனம்:
தற்போது செய்து கொண்டிருக்கும் பணிகள் மற்றும் ப்ராஜக்டுகளுக்கு தடை வரலாம். எந்தவொரு விவாதத்தையும் தவிர்க்க வேண்டும். முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை கவனமாக படிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம் - க்ரே
அதிர்ஷ்ட எண் - 8
பரிகாரம் - மாற்றுத்திறனாளி நபருக்கு உதவி செய்யவும்
சிம்மம்:
வணிகத்தில் புதிய பணிகளை தொடங்குவீர்கள். பார்ட்னர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும். இன்றைக்கு நீங்கள் நினைக்கும் காரியங்கள் பூர்த்தி அடையும். முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்ட எண் - 2
பரிகாரம் - ஆலமரத்தடியில் விளக்கு ஏற்றவும்
விருச்சிகம்:
பொருளாதார விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். சிக்கலுக்குரிய விஷயங்களுக்கு சமரசங்கள் மூலமாக தீர்வு காணலாம். கடன் பெறுவதற்கு தயாராகவும். தினசரி பணி மூலம் நிதி லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்ட எண் - 3
பரிகாரம் - ராமர் கோவிலுக்கு கொடி வழங்கவும்
மகரம்:
அன்புக்குரியவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். தேவையற்ற விஷயங்களில் நேர விரயம் செய்ய வேண்டாம். உங்களுக்கான வாய்ப்புகளை இழப்பீர்கள். ஆரோக்கியம் குறித்து கவனமாக இருக்கவும். பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.
அதிர்ஷ்ட நிறம் - கருப்பு
அதிர்ஷ்ட எண் - 6
பரிகாரம் - சிவனுக்கு தண்ணீர் அபிஷேகம் செய்யவும்