மேஷம்:
ஏற்கனவே இருந்த சில சட்ட சிக்கல்கள் சரி செய்ய வேண்டிய நிலை தொழில் செய்பவர்களுக்கு உண்டாகும். பொறுமை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகம் செல்பவர்கள் பொறுமையை கையாள்வது அவசியம். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. முதலீடுகள் மற்றும் தொழில் விருத்தி செய்வதற்கு ஏற்ற நாள்.
பரிகாரம் - சிவலிங்கத்திற்கு நீர் தானம் அளிக்க வேண்டும்.
சிம்மம்:
இந்த நேரத்தில் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட வேலைகள் மெதுவாக நடைபெறும். ஆனால் உங்கள் ஆர்வத்தின் காரணமாக அனைத்து தடைகளையும் தவிர்த்து சாதனை புரிவீர்கள். அலுவலகம் செல்வோருக்கு அலுவலக வேலையாக வெளியே பயணங்கள் செய்ய வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - பிராணாயாமத்தை பயிற்சி செய்து வர வேண்டும்
கன்னி:
அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் ஏதேனும் மனஸ்தாபம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. ஆனால் பின்னர் அதுவே சரி ஆகிவிடும். உங்களது குறிக்கோளை அடைவதற்கு அரசாங்க உத்தியோகத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். அலுவலக சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும்.
பரிகாரம் - சூரிய பகவானுக்கு நீர் காணிக்கை அளித்து வழிபட வேண்டும்
துலாம்:
தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகிவிடும். திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர்கள். சந்தைப்படுத்துவதிலும் பணம் வசூலிப்பதிலும் கவனம் செலுத்துவது நல்லது. அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவருக்கு உயர் அதிகாரிகளிடம் மூலம் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - சிவலிங்கத்திற்கு நீர் காணிக்கை வழித்து வழிபட வேண்டும்.
தனுசு:
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் செய்யும் பெண்மணிகளுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். ஆனால் உங்களுக்கு தொழில் முறைகளை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள தேவையில்லை. தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
பரிகாரம் - ஆசிரியர் அல்லது வயதில் மூத்தவர்களிடமிருந்து ஆசி பெற வேண்டும்.
மகரம்:
வேலை பார்க்கும் இடத்தில் அனுபவசாலிகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் எதிராளியின் நடவடிக்கைகளை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. தொழில் செய்யும் பெண்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கியமாக அவர்கள் தங்களது முயற்சியின் மூலம் புதிய சாதனைகளையும் மேற்கொள்வார்கள்.
பரிகாரம் - ஆஞ்சநேயர் கோயிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
மீனம்:
தொழிலில் சில பிரச்சினைகள் உண்டாக கூறலாம். எனவே அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உங்கள் மேற்பார்வையில் செய்வது நல்லது. அலுவலகம் செல்லும் நபர்களுக்கு புதிய நற்செய்திகள் கிடைக்கக்கூடும். உயர் பதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - முதியோர் இல்லங்களுக்கு போர்வைகளை தான் தானம் அளிக்கலாம்.