மேஷம்:
வணிக விஷயங்களில் இன்று சில முடிவுகளை எடுக்கும் போது நீங்கள் தெளிவான சிந்தனையுடன் நிதானமாக இருக்க வேண்டும். இன்று எதிர்கொள்ளும் சிக்கல்களை எளிதாக மற்றும் விவேகமாக தீர்ப்பீர்கள். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். இல்லையென்றால் பண இழப்பை சந்திக்க நேரிடும். இன்று உங்கள் பக்கம் வரும் வாய்ப்புகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு தண்ணீர் வைத்து வழிபடுங்கள்
ரிஷபம்:
நிதி விஷயங்களில் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். ரிசோர்ஸ்களை அதிகப்படுத்துவதன் மூலம் உங்கள் நிதி நிலையை பலப்படுத்த வேண்டும். பணியிடத்தில் உங்களது பொருள் திருட்டு போவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஆன்லைன் பரிவர்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: பைரவர் கோயிலில் தேங்காய் வைத்து வழிபடவும்
கடகம்:
உங்களது பொருளாதார நிலையில் இன்று முன்னேற்றத்தின் அறிகுறிகள் காணப்படுகின்றன. நிலுவையில் இருக்கும் சில வேலையை பற்றி கவலை இருந்தாலும் விரைவில் மேம்படும் அவற்றை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களுக்கு கிடைக்காமல் இருந்த பணம் இன்று கிடைக்கும். , சரியான ஆலோசனைக்கு முதலீடு செய்வது எதிர்காலத்தில் பெரிய லாபம் தரும்.
பரிகாரம்: மாடுகளுக்கு பசுந்தீவனம் வைக்கவும்
சிம்மம்:
வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும், அதிர்ஷ்டமும் இன்று உள்ளது. இன்று நேரத்தை வீணாக்காதீர்கள், பணத்தை செலவழிக்கும் முன் சிந்தியுங்கள், இல்லையெனில் நீங்கள் எதிர்காலத்தில் வருந்த வேண்டியிருக்கும். இன்று பணத்தை சேமிக்க முயற்சிக்கவும்.
பரிகாரம்: சாப்பிட கூடிய மஞ்சள் நிற உணவுகளை தானமாக வழங்கவும்
கன்னி:
இன்று உங்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக அலுவல பணிகள் பாதிக்கப்படலாம். இதனால் உங்களது நற்பெயருக்கு உயரதிகாரிகள் மத்தியில் களங்கம் ஏற்படலாம். எனினும் பொருளாதார நிலையில் முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்
விருச்சிகம்:
உங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளில் வெற்றி பெறுவது உங்களது மன உறுதியை அதிகரிக்கும். இன்று பொருளாதார நிலையில் முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்திப்பது இன்று சாத்தியமாகும். திருமண வாழ்க்கை இன்று சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்
தனுசு:
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணத்தை இன்று திரும்ப பெறுவீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் கொண்டாட்ட சூழ்நிலை இன்று இருக்கும். இன்று மேற்கொள்ளப்படும் வணிக ஒப்பந்தங்களில் லாபங்கள் கிடைக்கும். பயனுள்ள விஷயங்களில் நேரத்தை செலவழிக்கவும்.
பரிகாரம்: குடும்ப பெரியவர்களின் ஆசீர்வாதம் பெற்று வெளியே செல்லவும்
மகரம்:
வணிகர்களுக்கு இன்று அருமையான நாளாகவும், நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும் நாளாகவும் அமையும். மறுபுறம் ஊழியர்களாக வேலை செய்யும் நபர்களுக்கு இன்று நேரம் சாதகமானது அல்ல, நிதி இழப்பு ஏற்படலாம், எனவே கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுங்கள்.
பரிகாரம்: ஓம்நம சிவாய மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்
மீனம்:
மாற்றங்கள் குறித்து கவலை இருக்கலாம். சகோதரர்களிடையே பதற்றம் அல்லது சண்டை சச்சரவு அதிகரிக்கும். நீண்ட காலமாக கிடைக்காத பணத்தை இன்று நீங்கள் எளிதில் மீட்டெடுப்பீர்கள். அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு அனுமான் சாலிசாவை பாராயணம் செய்யவும்