மேஷம்:
வியாபாரிகளுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரம் வேகம் பெறும். புதிய ஒப்பந்தங்கள் லாபத்தை பெற்று தரும். வியாபாரிகள் இன்று தங்களது தொழிலில் சிறப்பாக செயல்படுவார்கள். நம்பிக்கையை விடாமல் இருந்தால் இன்று திட்டமிட்டபடி இலக்குகளை அடைவீர்கள். கட்டுமான பணிகள் விரைவாக நடக்கும்.
பரிகாரம் - சிவ சாலிசா பாராயணம் செய்யவும்
ரிஷபம்:
அத்தியாவசிய விஷயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும், முக்கிய பணிகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். ஆவணங்களை கையாளுவதில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு இன்று தொழில் வியாபாரம் சாதாரணமாக இருக்கும். எதிலும் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
பரிகாரம் - சரஸ்வதி தேவியை வழிபடவும்
கடகம்:
வணிக வேலைகளில் உணர்ச்சிவசப்படுவது மற்றும் கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும். இன்று எதிலும் எளிமையாக இருங்கள். சுயநலம் மற்றும் ஆணவத்தை தவிர்க்கவும். அவசரம் காட்டாமல் அமைதியாக இருங்கள். வியாபாரிகள் தங்கள் தொழில் வியாபாரத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். லாபம் சராசரியாக இருக்கும்.
பரிகாரம் - ஏழைகளுக்கு சிவப்பு பழங்களை தானம் செய்யுங்கள்
சிம்மம்:
பணியிடத்தில் நம்பிக்கையை பேணுவீர்கள். இன்று எவ்வித வதந்திகளிலும் சிக்கி கொள்ள இடம் கொடுக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு தொழில் சுமுகமாக நடைபெறும் மற்றும் லாபம் அதிகரிக்கும். பெரிய இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எந்த சூழலிலும் உங்கள் கருத்தை முன்வைக்க தயங்காதீர்கள்.
பரிகாரம் - ஆதரவற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்
கன்னி:
வியாபாரிகளுக்கு இன்று தொழில் வியாபாரத்தில் அனுகூலமான செய்திகள் வரும், செல்வம் பெருகும். சுப காரியங்கள் கை கூடும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களை சுற்றியுள்ள அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். காதல் உறவுகள் தீவிரமாக இருக்கும். தனிப்பட்ட வெற்றிகள் அதிகரிக்கும்.
பரிகாரம் - சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்யவும்
விருச்சிகம்:
சட்ட விஷயங்களில் பொறுமை காட்டுவீர்கள். வழக்கத்தை விட பணிகளில் இன்று உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் இன்று தங்களது தொழிலில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். சர்ச்சை அல்லது பிரச்சனைகளில் இருந்து விலகியே இருங்கள். திட்டமிட்ட வேலைகளில் சில இன்று நிலுவையில் இருக்கலாம். பரிவர்த்தனையில் அலட்சியம் காட்டாதீர்கள்.
பரிகாரம் - ஹனுமன் சாலிசா பாராயணம் செய்யவும்
தனுசு:
நிலம் கொடுக்கல் வாங்கல் இன்று அதிகாரபூர்வ ஒப்பந்தங்களாக மாறும். முதலீடு செய்வதற்கு முன் உரிய ஆலோசனைகளை பெற்று கொள்ளுங்கள். வணிக பணிகளில் லாபம் உயரும். இலக்குகள் நிறைவேறும். எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு இன்று வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் உள்ளன. தேர்வு போட்டியில் பங்கேற்றால் சிறப்பான முடிவு கிடைக்கும்.
பரிகாரம் - பசுவிற்கு தீவனம் கொடுங்கள்
மகரம்:
பணியிடத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்காலத்திற்காக சில முக்கிய விஷயங்களை திட்டமிடுவீர்கள். வியாபாரிகளுக்கு வணிக விவகாரங்கள் மேம்படும். உங்களுக்கு இன்று அனைவருடனும் ஒத்துழைக்கும் உணர்வு இருக்கும். வியாபாரிகள் இன்று சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
பரிகாரம் - ஏழைகளுக்கு உணவுகளை தானம் கொடுங்கள்
மீனம்:
தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு முன் சீனியர்களின் ஆலோசனையை பெறவும். இன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். முதலீடு என்ற பெயரில் மோசடி நடக்கலாம் என்பதால் கவனம் தேவை. நிலம் வாங்கும் விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம் - சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்