மேஷம்:
வியாபாரம் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் பெறுவீர்கள். உத்தியோகத்தில் போட்டித்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அலுவலகத்தில் அனைவரின் நம்பிக்கையையும் பெறுவீர்கள். பொருளாதார மேம்பாட்டுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடு சிறப்பாக இருக்கும். வாகனம், நிலம் தொடர்பான விஷயங்கள் மேம்படும்.
பரிகாரம்: வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குங்குமம் வைத்துச் செல்லவும்
விருச்சிகம்:
தொழில் வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பல விதமான முயற்சிகளும் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் சோம்பலை தவிர்க்கவும். தனிப்பட்டு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சிறப்பாக இருக்கும். எதிரிகள் அமைதியாக, அடங்கி இருப்பார்கள். நெருங்கியவர்களின் ஆதரவு கிடைக்கும். நல்ல லாபம் பெறுவீர்கள்.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு இனிப்பு படைத்து வழிபடுங்கள்.
தனுசு:
அலுவலக வேலை செய்பவர்களின் வருமானம் உயரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நன்றாக இருப்பார்கள். பொருளாதார மேம்பாடு காணப்படும். கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல் தீரும். விலைமதிப்பற்ற பரிசுகளைப் பெறுவீர்கள். தொழிலில் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ இலை வைத்து அர்ச்சித்து வணங்கவும்.
மகரம்:
வேலை செய்யும் இடத்தில், உங்கள் மன உறுதி மற்றும் தைரியத்தால் அனைவரையும் கவர்வீர்கள். ஆக்கப்பூர்வமான பணிகளில் வேகம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் வெற்றி பெறும். தொழில் வல்லுநர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். நிர்வாகம் மேம்படும். பொருளாதார வணிக வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும்.
பரிகாரம்: வேலை செய்யும் இடத்தில் சரஸ்வதியை வழிபடவும்.
மீனம்:
இன்றைய நாள் அதிக நன்மை தரும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் ரிஸ்க் எடுத்தல் லாபம் பெறுவீர்கள். பொறுமை மற்றும் உங்கள் மென்மையான நடந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை சரிசெய்யலாம். உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, இதுவரை நீங்கள் தொலைத்தவற்றை அனைத்தையும் நீங்கள் பெறலாம். கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவ முடிந்தால் நன்றாக இருக்கும்.