மேஷம்:
இன்றைக்கு எந்த வேலையை செய்தாலும் நிதானம் தேவை. வணிகர்களுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக அமையக்கூடும். தேவையற்ற செலவுகள் உங்களுக்கு ஏற்படக்கூடும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் நலத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
பரிகாரம் - பசுவிற்கு பச்சை புல் அல்லது கீரையை கொடுங்கள்.
ரிஷபம்:
இன்றைக்கு கடன் பற்றி கவலைகள் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைகள் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல் அமையும்.
பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.
மிதுனம்:
இன்றைக்கு நிறுத்தப்பட்ட எந்த வேலையைப் பற்றியும் கவலைப்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் சூழல் உங்களுக்கு ஏற்படும். சில வேலைகள் தொடர்பாக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். சொத்து முதலீடுகளில் நன்மை கிடைக்கும் நாளாக அமையும்.
பரிகாரம்: ஒரு ஏழைக்கு பொருட்களை தானம் செய்யுங்கள்.
கடகம்:
இன்றைக்கு பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்படும். அதிகாரிகளுடன் அல்லது வணிகத்துறையில் உள்ளவர்களுடன் தேவையற்ற விவாதங்கள் ஏற்படும். உங்களின் வேலைத்திறமையால் எதிரிகளை வெல்லக்கூடும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும்.
பரிகாரம்: பறவைக்கு உணவளிக்கவும்.
சிம்மம்:
இன்றைக்கு புதிய வேலை மற்றும் புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படக்கூடும். எந்தவொரு பிரச்சனையையும் எளிதில் சமாளிக்கும் நாளாக அமையும். புதிய சிந்தனைகளுடன் உங்களது வேலையைத் தொடங்குங்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றி புரிந்துக் கொள்வீர்கள். கற்பனை தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். நெருக்கமானவர்களின் மூலம் உங்களது பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: செல்லப்பிராணிகளுக்கு உணவுகளை வழங்கவும்
கன்னி:
இன்றைக்கு உங்களது வாழ்க்கையில் நடந்துக் கொண்டிருக்கும் திட்டங்கள் மற்றும் வேலைகளில் குறுக்கீடுகள் ஏற்படக்கூடும். எந்தவிதமான விவாதம் அல்லது மோதல்களைத் தவிர்க்கவும். தேவையில்லாத முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு பரிவர்த்தனைக்கும் முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்க வேண்டும். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். உங்களது வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும்.
பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபர்களுக்கு உதவி செய்யவும்..
துலாம்:
இன்றைக்கு நிதானம் தவறினால் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் கோபம், பதற்றம் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும். பணம் சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். எனவே உணர்ச்சிவசப்பட்டு எந்த வேலையையும் செய்தால் நஷ்டம் ஏற்படக்கூடும்.
பரிகாரம்- இறைவழிபாட்டை மேற்கொள்ளவும்.
விருச்சிகம்:
இன்றைக்கு புதிய பணியிடத்திற்கு மாற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக அமையும். வியாபாரத்தில் புதிய திட்டங்களின் மூலம் வெற்றியைப் பெறுவீர்கள். புதிய முதலீடு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். எந்த சூழலிலும் நிதானத்தை கைவிடாதீர்கள்.
பரிகாரம்: பிடித்த தெய்வத்திற்கு கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
தனுசு:
இன்றைக்கு தனவரவு மேம்படும் நாளாக அமையும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய இலக்குகள் ஏற்படும். எந்த வேலையை நீங்கள் செய்தாலும் எச்சரிக்கையாக இருக்கவும். துறையில் செல்வாக்கு மற்றும் பெருமையான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.
பரிகாரம்: சிவப்பு பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்.
மகரம்:
இன்றைக்கு நீங்கள் நீண்ட நாள் சந்தித்தப் பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவை எடுக்கும் சூழல் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை. நீங்கள் எந்தவொரு நபரிடமோ? வங்கியிலோ? அல்லது நிறுவனத்திலோ? கடன் வாங்க வேண்டாம். உங்களால் அடைக்க முடியாமல் திணறுவீர்கள். பழைய நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
பரிகாரம் - சரஸ்வதிக்கு வெண்ணிற மலர் மாலை அணிவிக்கவும்.
கும்பம்:
இன்றைக்கு உடன் பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும் நாளாக அமையும். சிந்தித்து நீங்கள் எடுக்கும் முடிவுகளில் வெற்றியைப் பெறுவீர்கள். தடைப்பட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிவுபெறும். சில வேலைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், முதலில் நீங்கள் அதைப்பற்றி முழுமையாக அறிந்துக்கொண்டு செயல்படுங்கள். இதனால் எதிர்காலத்தில் இதன் முழு பலனை நீங்கள் பெற முடியும். வாழ்க்கையில் எதிர்க்கொண்டுவந்த பொருளாதார பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
பரிகாரம்: ராமர் கோவிலில் கொடியை சமர்பிக்கவும்.
மீனம்:
இன்றைக்கு எந்த வேலையையும் செய்தாலும் கவனம் தேவை. தொழில் முன்னேற்றத்திற்காக புதிய அலுவலக வேலையை மாறுவதற்கு அல்லது புதிய திட்டத்தில் வேலையைத் தொடங்குவதற்கான சாதகமான நாள் இல்லை. எனவே எதிலும் நிதானம் தேவை. கடன் வாங்கும் சூழல் உள்ளது. சுப காரியங்களில் இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். தொழில் பங்குதாரர் அல்லது நெருங்கிய பார்ட்னர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.
பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்.