மேஷம்:
இன்றைக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களது பணியை விரிவுப்படுத்துவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். பணம் சம்பந்தமான விஷயங்களில் அதீத கவனம் தேவை. ஆபத்தான செயல்களில் ஆர்வம் காட்டினால் நஷ்டத்தை அடைவீர்கள். பங்குச் சந்தையில் எந்தவொரு முதலீடும் செய்யாதீர்கள். மனதில் எண்ணிய காரியங்களை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்:- குருக்கள் அல்லது பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுங்கள்.
ரிஷபம்:
இன்றைக்கு உங்களின் சாதுர்யமானப் பேச்சுகளின் மூலம் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ஏற்படும் புதிய தொடர்புகள் உங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். உங்களது வணிகத்தில் கூட்டாண்மை தொடர்பான எந்த வேலையிலிருந்து சற்று விலக்கிக் கொள்ளுங்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் நாள் இன்று. ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
பரிகாரம் :- தாய்க்கு இனிப்புகளை ஊட்டவும்.
மிதுனம்:
இன்றைக்கு நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். கடந்த கால நினைவுகள் மனதில் தோன்றி மறையும். எந்தவொரு காரியத்திலும் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். முதலீடு விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார நடவடிக்கைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழில் விரிவாகத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம் :-மகாலட்சுமி வழிபாடு நடத்தவும்..
கடகம்:
இன்றைக்கு வியாபார பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். உங்களின் தொழிலில் சுப பலன்கள் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்தாலும் சிந்தித்து செயல்படவும். சரியான திசையில் இலக்கை நோக்கி நகர்வதால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.
பரிகாரம் :- காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
சிம்மம்:
இன்றைக்கு உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும் நாளாக அமையும். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். தைரியத்துடன் உங்களது இலக்குகளை அடைய முயல்வீர்கள். சம்பளம் வாங்குபவர்களுக்கு போனஸ் அல்லது கமிஷன் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் உள்ளவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
பரிகாரம் : அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்.
கன்னி:
இன்றைக்கு பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல் அதிகம் ஏற்படும். வியாபார நடவடிக்கைகள் அதிகரிக்கும். பொருள்கள் மற்றும் யோசனைகளை மற்றவர்களிடத்தில் பரிமாறும் போது நல்ல லாபம் பெறுவீர்கள். உங்களின் வணிகத் திட்டங்கள் வேகமாக நிறைவேறும். உங்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
பரிகாரம் :பைரவர் கோவிலுக்கு தேங்காய் பிரசாதம் வழங்கவும்.
துலாம்:
உங்களின் மதிப்பு மேம்படும் நாள் இன்று. புத்திசாலித்தனத்தால் அனைவரின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்களது வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும். எந்த பணிகளை செய்தாலும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் நாள் இன்று. விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும் போது கவனம் தேவை. கணவன் மற்றும் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
பரிகாரம் : நாய்க்கு ரொட்டி கொடுங்கள்.
விருச்சிகம்:
இன்றைக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். திட்டமிடலில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வல்லுநர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதற்றமின்றி செயல்படவும். பல்வேறு சிந்தனைகளின் மூலம் குழப்பமான மனநிலையைப் பெறுவீர்கள். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.
பரிகாரம் :- முதியோர் இல்லங்களுக்கு உதவிகள் செய்யவும்.
தனுசு:
இன்றைக்கு எடுக்கும் முடிவுகளில் அதிக கவனம் தேவை. அந்நியர்களை மிக விரைவாக நம்பாதீர்கள். அவர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். முக்கியமான பணிகளை வேகமாக முடிப்பீர்கள். முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் திறன் வலுவாக இருக்கும். எந்தவொரு முடிவுகளை எடுத்தாலும் கவனம் தேவை. கணவன் மற்றும் மனைவிக்கிடையே ஒற்றுமைகள் அதிகரிக்கும். வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படக்கூடும்.
பரிகாரம் :- பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்.
மகரம்:
தொழில் ரீதியாக இன்று சாதனைகள் அதிகரிக்கும் நாளாக அமையும். விவசாய பணிகளில் தகுந்த ஆலோசனைப் பெற்று முடிவு எடுக்கவும். உயர் பொறுப்புகளின் இருப்பவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உங்களுடைய பணியை சிறப்பாக செய்வீர்கள். பெரிய தொழில்கள் கைக்கூடும் நாள் இன்று. பொருளாதார பலன்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் பரிவர்த்தனைகளில் தெளிவுடன் இருக்க வேண்டும்.
பரிகாரம்:- ஏழைக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொருட்களைப் பரிசளிக்கவும்.
கும்பம்:
நன்மைகள் நிறைந்த நாளாக இன்று அமையும். உடன் பிறந்தவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் ஒற்றுமை மேம்படும். வியாபாரத்தில் தனிப்பட்ட வேலையின் காரணமாக அதிக கவனம் செலுத்த முடியாமல் போகும். நிதானத்துடன் செயல்படவும். பணியாளர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு வெற்றியைக் கிடைக்க செய்யும். தொழிலில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் நிதானமாக செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.
பரிகாரம் :- சிவ பெருமானின் நாமத்தை உச்சரிக்கவும்.
மீனம்:
இன்று உங்களுக்கு வெற்றி நிறைந்த நாளாகவே அமையும். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். எந்த ஒரு புதிய வேலையையும் தயக்கம் இன்றி தொடங்கலாம். தொழில் தொடர்பான பயணங்கள் சாத்தியமாகும். அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்படும். தொழில் வியாபாரம் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளிவட்டாரங்களில் விவேகத்துடன் செயல்படவும்.
பரிகாரம் :- பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்.