மேஷம்:
அர்ப்பணிப்போடு நீங்கள் இன்று எந்த வேலை செய்தாலுமே அதற்கான பழங்கள் கைமேல் கிடைக்கும் வியாபாரம் செய்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனென்றால் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையை பெறவேண்டும்.
பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாயை வைத்து வழிபடவும்
மிதுனம்:
அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்கவும். அதேபோல அறிமுகம் இல்லாதவர்கள் கூறும் ஆலோசனையின்படி எதுவும் செய்ய வேண்டாம், குறிப்பாக பணம் முதலீடு செய்ய வேண்டாம். புதிய வணிகம் தொடங்குவதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வீடு சம்பந்தப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
பரிகாரம்: அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்
கடகம்:
இன்று வணிகம் செய்பவர்களுக்கு மிக மிக சாதகமான மற்றும் அதிர்ஷ்டமான நாளாக அமையப்போகிறது. வேலையில், அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஒரு சிலர் புதிய திட்டத்தில் பணியைத் தொடங்குவார்கள். ரியல் எஸ்டேட் பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
பரிகாரம்: ஆலமரத்தின் கீழ் நெய் விளக்கு ஏற்றுங்கள்
விருச்சிகம்:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பருவநிலை மாற்றம் உங்கள் உடலை பாதிக்கலாம். இதனால் வணிகம் அல்லது அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலைகளில் தாமதம் ஆகும். இருப்பினும் அவசர அவசரமாக வேலைகளை முடிக்கவேண்டும் என்று பதற்றமாக செய்யாதீர்கள். அது உங்கள் பணியில் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
பரிகாரம்: வசதியற்ற மாணவன் அல்லது மாணவியின் கல்விக்கு உதவுங்கள்
மகரம்:
முக்கியமான முடிவுகளை எடுக்க தாமதிக்காதீர்கள். உங்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கவும். எல்லா வேலைகளையும் திட்டமிட்டு சரியாக செய்யும் பொழுது எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். தேவையில்லாமல் செலவு செய்யாதீர்கள் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள்.
பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள்