சிம்மம்:
குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கலாம், இதனால் அலுவலக வேலைகள் பாதிக்கப்படும். இரண்டையும் பிரித்து வைத்து, நிர்வகிக்க முயற்சி செய்யுங்கள். கால தாமதம் செய்யாமல் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க முயற்சி செய்யுங்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: கால்நடைகளுக்கு உதவி செய்யுங்கள்.
துலாம்:
அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். புதிய நபர்களை நம்புவதற்கு முன், அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் நீங்கள் சட்ட ரீதியான பிரச்சனையில் சிக்கிக் கொள்ளலாம். முதலீடு செய்வதற்கு மிகச் சிறந்த நாள் ஆனால் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது உகந்தது.
பரிகாரம்: புதன் கிரகம் தொடர்பான விஷயங்களை தானம் செய்யுங்கள்.
விருச்சிகம்:
நீங்கள் நிதி ரீதியான சிக்கல்களைத் தவிர்க்க விரும்பினால், யாருடனும் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள வேண்டாம். இல்லையெனில் இழப்பு நேரிடும். தொடர்ச்சியான பிரச்சனையால் உங்கள் மனம் பலவீனமாக காணபப்டலாம். வியாபாரிகளுக்கு இந்த நாள் சாதாரணமாக இருக்கும்.
பரிகாரம்: பசு காப்பகத்திற்கு தானம் செய்யுங்கள்.