மேஷம்:
இன்று பொறுமை மற்றும் நம்பிக்கையுடனும் முன்னேறுவீர்கள். எதிலும் பேராசை மற்றும் அளவு கடந்த ஆசை வைக்க வேண்டாம். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரிகள் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவசரம் காட்ட வேண்டாம், இன்று ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு நீர் வைத்து வழிபடவும்
மிதுனம்:
தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் சுமுகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பான சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் லாபம் மற்றும் விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்கள் ஆக்டிவிட்டியால் உங்களை சுற்றி இருப்போர் பாதிக்கபடலாம்.
பரிகாரம்: ராமர் கோவிலில் கொடியை காணிக்கையாக செலுத்தவும்
கடகம்:
பணியிடங்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் செயல்திறன் பராமரிக்கப்படும். பொருளாதார ரீதியிலான வணிக விஷயங்கள் சாதகமாக அமையும். பரம்பரை மற்றும் பாரம்பரிய வியாபாரம் இன்று வேகம் பெறும். வியாபாரிகளுக்கு சாதகமான நிலை ஏற்படும் மற்றும் செல்வம் பெருகும். பொருளாதார நிலை முன்னேற்றம் காணும்.
பரிகாரம்: அன்னை சரஸ்வதி தேவிக்கு வெண்ணிற மலர் மாலை அணிவித்து வழிபடவும்
சிம்மம்:
இன்று உங்களுக்குள் உருவாகும் தைரியம் உங்களின் செயல் திறனை அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் முடிவுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பான சலுகைகள் கிடைக்கும். உங்களது எதிர்கால திட்டங்கள் பலம் பெறும்.
பரிகாரம்: பசுமாடுகளுக்கு தீவனம் கொடுங்கள்
கன்னி:
இன்று ஆக்கப்பூர்வமான வேலைகளில் உங்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். பகிரப்பட்ட வேலைகளில் நீங்கள் முன்னோடியாக இருப்பீர்கள். சில தீவிர விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உங்கள் மனம் முழுதும் வெற்றி உணர்வு நிறைந்திருக்குக்கும்.
பரிகாரம்: மாலையில் அரசமரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்
துலாம்:
இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீர்கள், உங்கள் கட்டுப்பாட்டில் விஷயங்கள் இருக்கும். செல்வம் பெருகும். தொழில் வியாபாரத்தில் சாதனைகள் அதிகரிக்கும். விரும்பிய விஷயங்களில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரம் மேம்படும்.
பரிகாரம்: எறும்புக்கு தீனியாக வைக்கும் மாவில் சர்க்கரை சேர்க்கவும்
விருச்சிகம்:
முக்கிய வேலை அல்லது முயற்சிகளில் நீங்கள் இன்று வேகமாக செயல்பட வேண்டும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் வலுவாக இருக்கும். நீங்கள் இன்று எதிர்கொள்ளும் பெரும்பாலான விஷயங்களில் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும்.
பரிகாரம்: மாற்றுத்திறனாளி நபர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவும்
தனுசு:
இன்று உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து லாபம் வரும். உங்களின் தகவல் தொடர்பு திறன் இன்று சிறப்பாக இருக்கும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். பொருளாதார விஷயங்களில் வேகத்தைக் கடைப்பிடிப்பீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளை நிறுத்தாமல் தொடருங்கள்.
பரிகாரம்: தெருநாய்களுக்கு உணவளிக்கவும்
மகரம்:
அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலையை சரியான நேரத்திற்குள் முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் இன்று சாதாரணமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் தொழில் சார்ந்த விரிவாக்கத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். அனுபவம் வாய்ந்தவர்களின் சகவாசம் இன்று உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
பரிகாரம்: பறவைகளுக்கு உணவளிக்கவும்
கும்பம்:
அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் இலக்கை வேகமாக முடிப்பீர்கள். எதிரிகள் மத்தியில் உங்களின் தைரியம், துணிச்சல் வெளிப்படும். தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். வெற்றி உணர்வு அதிகரிக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் சிறப்பாக செயல்படுவார்கள்.
பரிகாரம்: ஏழைகளுக்கு வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யுங்கள்
மீனம்:
இன்று நீங்கள் நேர மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொருளாதார விஷயங்களில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் விழிப்புணர்வு அதிகரிக்கும். வேலை விஷயங்களில் பொறுமையை கடைபிடித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அதீத உற்சாகத்தை தவிர்க்கவும்.
பரிகாரம்: துர்க்கை கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும்