மேஷம்
‘என்னா வாழ்க்கைடா’என நீங்கள் விரக்தியான மனநிலையை உணர்ந்தால் உடனே ஒரு ட்ரிப்பிற்கு பிளான் செய்யுங்கள். பேக்கை பேக் செய்து எடுத்துக்கொண்டு கிளம்புங்கள், இது உங்களுக்கு நல்ல புத்துணர்ச்சியை தரலாம். மிகவும் சலிப்பான வேலைகளை செய்வதாக நினைத்தால் விரைவில் அது வேகமெடுக்கலாம். இன்னும் ஒரு வாரத்திற்குள் பண விஷயத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். திடீரென வீட்டிற்கு வர உள்ள செல்லப்பிராணி உங்கள் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையாக அமையலாம். உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பழகுவதன் மூலம் நீங்கள் நன்றாக உணர்வீர்கள். குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - திறந்திருக்கும் கேட்
ரிஷபம்
வாய்ப்புக்கள் கிடைப்பதே கஷ்டமான இந்த சமயத்தில், வர உள்ள புதிய வாய்ப்புகளை தவறவிடாமல் நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இப்போது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய தகவல் தொடர்பு படிப்படியாக முன்னேறி வருகிறது. எட்டி தொட இன்னும் நிறைய இருக்கிறது என்ற எண்ணம் கொண்ட நீங்கள், உங்கள் வெற்றிக்காக சில வரையறைகளை உருவாக்கி கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களிடமிருந்து கூடுதல் நேரத்தை எதிர்பார்க்கலாம். எனவே கிடைக்கும் ஓய்வு நேரத்தை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள். ஒரு புதிய ஆரோக்கிய வழக்கத்தை பின்பற்றுவது உங்களை மனரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக மாற்றும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரோஜா இதழ்
மிதுனம்
நீங்கள் வசித்து வரும் வீட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற திடீர் எண்ணமும், அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்பதும் மனதை ஆக்கிரமிக்க கூடும். புதிய வருமானம் உங்கள் வழியில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது ஒரு நல்ல நேரத்தையும் அர்ப்பணிப்பையும் கேட்கும், இப்போது அதைச் செய்ய நீங்கள் தயாராக இருக்கலாம். உங்கள் மீது ஒரு புதிய நம்பிக்கை இருப்பதாக தெரிகிறது. ஆற்றல்கள் நேர்மறையானவையாக உள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் தொந்தரவாகவும் எதிர்மறையாகவும் இருந்த அனைத்து விஷயங்களும் இப்போது பின்னுக்குத்தள்ளப்பட்டு விட்டது. எனவே இனி நல்லதே நடக்கும் என நம்புங்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புத்தர் சிலை
கடகம்
பொறுமை கடலினும் பெரியது என்பார்கள். எனவே நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டிய நேரம் இது. அதேசமயம் நீங்கள் ஏதாவது திட்டத்தை செயல்படுத்த நினைத்தால், அதிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொள்வது நல்லது. நன்கு அறிந்த நம்பகமான சொத்துக்களை மட்டுமே பயன்படுத்துங்கள். உடன் பணியாற்றி வரும் ஒருவர் உங்கள் புகழ் வெளிச்சத்தை திருடிக்கொள்ள நினைக்கிறார், எனவே கொஞ்சம் உஷாராக இருங்கள். பணியிடத்தில் மாறும் சூழல் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அது உங்களுக்கு சாதகமாக இருக்காது. வீட்டுச் சூழ்நிலை அமைதியானதாகவும், நம்பமானதாகவும் இருக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - உருவப்படம்
சிம்மம்
வரும் நாட்களில் ஒரு புதிய பயணம் உங்களுக்காகவே காத்திருக்கிறது. உங்களுடைய ஆளுமை பண்பு முன்னேற்றத்திற்கு உதவும். உங்களுக்கான தொடர்பு எல்லையை விரிவுப்படுத்த, உங்களது இயல்பான அழகை மட்டுமே பயன்படுத்துங்கள். உங்கள் காந்த ஆளுமை மக்களை ஈர்க்கும் மற்றும் உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் கவனிக்க வைக்கும். வீட்டிற்கு முன் சில இடையூறுகள் இருக்கலாம். திட்டமில்லாத ஒன்றுகூடல் ஒரு வரவேற்பு இடைவேளை போல் இருக்கலாம் மற்றும் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஸ்வீட் பாக்ஸ்
கன்னி
உங்களை பற்றி அறிந்து கொள்ள அக்கம்பக்கத்தில் புதிதாக யாராவது ஒருவர் ஆர்வமாக இருக்கலாம். உங்கள் சுற்றுப்புறத்தில் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு அசாதாரண செயல்பாடு இருக்கலாம். தற்சமயம் டிரெண்டிங்கில் உள்ள ஏதாவது ஒன்றை பரிசோதனை செய்ய நீங்கள் முடிவு செய்யலாம். நீண்ட காலமாக மறைந்து வைத்திருந்த ரகசியம் ஒன்றை, இனியும் பொத்தி பாதுகாப்பது கடினமாக இருக்கலாம். நீங்கள் காலை உடற்பயிற்சிகளில் சிரமப்படுகிறீர்கள் என்றால், நண்பகல் நேரத்தில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யலாம். நெருங்கிய உறவுகளுடன் வணிகம் அல்லது வியாபாரம் தொடர்பாக கொடுக்கல், வாங்கல் வேண்டாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - குறிச்சொல்
துலாம்
மேல் பார்வைக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லை என தோன்றலாம், இதனால் புதிய வாய்ப்புகள் வருவதை நீங்கள் கண்டுகொள்ளாமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் இது ஒரு இருட்டான சுரங்கப்பாதையை கடந்து செல்வது போல் தற்காலிகமானது, விரைவில் நல்ல காலம் பிறக்கும், அதிர்ஷ்டம் எனும் ஒளி கண்ணில் தெரியும். உங்கள் பதவி உயர்வு பற்றிய பேச்சுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கலாம், அதற்கான பேச்சுவார்த்தை இப்போது முழு வேகத்துடன் நடக்கலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வாக்கிங் ஸ்டிக்
விருச்சிகம் (அக்டோபர் 24 - நவம்பர் 21):
நல்ல உள்ளம் உள்ளவர்களுக்கு அழகான விஷயங்கள் நடக்கும். இதுவரை உங்கள் அணுகுமுறையில் நீங்கள் கட்டிய உண்மை மற்றும் நேர்மை உங்களுக்கு வேகமாக முன்னேற உதவும். உங்கள் பணியாளர் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். முடிந்தால் உதவி செய்யுங்கள். எலக்ட்ரானிக் கேஜெட்கள் மற்றும் அவற்றின் ஷாப்பிங் உங்களை பிஸியாக வைத்திருக்கலாம். நீங்கள் ஒரு புதிய சொத்தை வாங்க நினைத்திருக்கலாம், அதனை வாங்குவது தொடர்பாக நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க இதுவே சரியான நேரம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மரப்பெட்டி
தனுசு
நீங்கள் ஷாப்பிங் செய்து நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிட திட்டமிட்டால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தோட்டக்கலை ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கலாம் மற்றும் வணிக யோசனையையும் உருவாக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலையின் வேகத்தில் சிக்கல் இருக்கலாம், சிறந்த முடிவுகளைப் பெற நீங்கள் சில வழிமுறைகளை மாற்ற வேண்டியிருக்கும். ஓய்வுக்காக வேறொரு நகரத்திற்குப் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இளஞ்சிவப்பு நிற பூக்கள்
மகரம்
குடும்பத்துடன் விழாக்களில் கலந்து கொள்ள நேரிடலாம். புதிய வாகனம் வாங்குவது பற்றிய யோசனைகள் தோன்றலாம். இம்மாத இறுதியில் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் யாரையும் பொதுவில் விமர்சிக்காதீர்கள், அவர்கள் விரைவில் அல்லது பின்னர் அதைப் பற்றி கேள்விப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் பேசிய பேச்சு, யாரையாவது காயப்படுத்தியிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்பது நல்லது. விஷயங்களை நன்றாக நிர்வகிக்கவும், உங்கள் ஆற்றலை அதிக அளவில் மாற்றவும் தேவையான யோசனை விரைவில் கிடைக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புத்தம் புதிய நாணயம்
கும்பம்
இப்போது தேவைப்படும் உங்கள் நண்பரிடம் கவனமாக இருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழைய வடிவங்கள் மீண்டும் மீண்டும் தோன்றலாம், அவற்றை நீங்கள் அடையாளம் காண முடியும். நீங்கள் பரிசோதனை செய்வதை விரும்புகிறீர்கள், ஆனால் அது நன்கு ஆராயப்படாததால், விஷயங்கள் நன்றாக முடிவதில்லை. வீட்டில் யாருக்காவது வரன் தேடிக்கொண்டிருந்தால், திருமண யோகம் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. நீங்கள் உண்மையிலேயே போற்றி புகழ்ந்து வரும் ஒருவரை அணுக வேண்டும் என்ற உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறலாம். இந்த கட்டத்தில் ஒரு கூட்டாண்மை பரிந்துரைக்கப்படவில்லை.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மீன்
மீனம்
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது அனைவரும் எதிர்பார்ப்பது, ஆனால் அது உங்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதால், உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து உருப்படியாக எந்த காரியமும் செய்ய முடியாமல் போகலாம். இதனால் மனதில் வெறுப்பு தோன்ற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மட்டத்தில் விஷயங்களைச் செய்ய நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். வேலைக்கான புதிய வாய்ப்பு விரைவில் உங்கள் வீட்டு வாசலைத் தட்டக்கூடும். பழையதை மீண்டும் இணைப்பதில் தனிமைக்கான தீர்வு காணலாம். வானிலை உங்கள் பயணத் திட்டங்களை சீர்குலைக்கலாம். எந்த ஆன்லைன் மோசடிக்கும் ஜாக்கிரதை. உங்கள் மனைவியிடம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கலாம், எனவே அவர்களிடமும் சில விஷயங்களை ஆலோசிக்கலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - டேன்ஜரின் தட்டுகள்