முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

nail, hair cutting day : இந்து மத நம்பிக்கைப்படி, நகம் வெட்டுதல், சவரம் செய்தல் மற்றும் முடி வெட்டுதல் ஆகியவை சுப மற்றும் அசுப விளைவுகளுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட நாட்களில் உங்கள் நகங்களையோ அல்லது முடியையோ வெட்டினால், அது உங்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

 • 18

  நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

  இந்து மத சாஸ்திரப்படி, வாரத்தின் சில நாட்கள் நகம் வெட்டுவதற்கும், ஷேவிங் செய்வதற்கும், முடி வெட்டுவதற்கு ஏற்றது அல்ல என கூறப்படுகிறது. இந்த வேலைகளை செய்ய சில நாட்கள் மட்டுமே சிறந்ததாக கூறப்படுகிறது. மற்ற நாட்களில் நகங்களை வெட்டுவது அல்லது தாடியை வெட்டுவது கிரகங்களின் தீய விளைவுகளை உங்கள் மீது கொண்டு வரும் மற்றும் நிதி நெருக்கடி உங்கள் வாழ்க்கையில் நுழையும் என்று கூறப்படுகிறது. எந்தெந்த நாள், நகம் வெட்ட, முடி வெட்ட மற்றும் சவரம் செய்ய சிறந்தது என பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

  திங்கட்கிழமை நகங்கள், முடி வெட்டினால் என்ன ஆகும்? : திங்கட்கிழமை சந்திரனுடன் தொடர்புடையது. ஜோதிடத்தில், சந்திரன் சந்ததி மற்றும் ஆரோக்கியத்தின் உறுப்பு என்று கருதப்படுகிறது. திங்களன்று முடி வெட்டுவது அல்லது நகங்களை வெட்டுவது மன அழுத்தத்தை அதிகரிக்க்கும், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். திங்கட்கிழமை நகம், முடி வெட்டுவதால் நீங்கள் நோய்வாய்ப்படலாம்.

  MORE
  GALLERIES

 • 38

  நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

  செவ்வாய் அன்று நகங்கள், முடி வெட்டினால்? : மத நம்பிக்கையின் படி, செவ்வாய் என்பது அனுமனுடன் தொடர்புடையது மற்றும் ஜோதிட நம்பிக்கையின் படி, செவ்வாய் கிழமை செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. செவ்வாய் மிகவும் கடுமையான கிரகமாக கருதப்படுகிறது மற்றும் தைரியம், துணிச்சலின் அங்கமாக பார்க்கப்படுகிறது. செவ்வாய்கிழமையன்று நகங்கள் அல்லது முடிகளை வெட்டுவது உங்களின் கோப குணத்தை அதிகரிக்கும். செவ்வாய் கிழமைகளில் நகங்கள் அல்லது முடி வெட்டுவது உங்கள் ஆயுளை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 48

  நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

  புதன் கிழமை நகங்கள், முடி வெட்டுவதால் ஏற்படும் விளைவுகள் : சாஸ்திரங்களின்படி நகங்கள், முடி மற்றும் தாடியை வெட்டுவதற்கு புதன்கிழமை உகந்ததாக கருதப்படுகிறது. இதனால், உங்கள் குடும்ப கடவுளின் ஆசியை பெறுவீர்கள். அத்துடன், லட்சுமி தேவியின் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். புதன்கிழமை முடி வெட்டுவது உங்கள் ஜாதகத்தில் புதன் நிலை வலுவாக வைத்திருக்கும். புதனின் அருளால் உங்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன் செல்வமும் புகழும் பெருகும்.

  MORE
  GALLERIES

 • 58

  நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

  வியாழன் அன்று நகங்கள், முடி வெட்டுவதால் ஏற்படும் விளைவு : வியாழன் கிழமை விஷ்ணுவின் நாளாகக் கருதப்படுகிறது மற்றும் இந்த நாள் வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது. இந்த நாளில் முடி வெட்டினால் லட்சுமி அம்மாள் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாள். அத்துடன் ஜாதகத்தில் வியாழனின் அசுப பலன்களையும் நீங்கள் சந்திக்க நேரிடும். அதனால் தான் வியாழன் அன்று முடி மற்றும் நகங்களை வெட்ட வேண்டாம் என கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 68

  நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

  வெள்ளிக்கிழமை நகங்கள், முடி வெட்டுவதால் ஏற்படும் 5 விளைவுகள் :  வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியுடன் தொடர்புடைய நாள். இந்த நாளில் முடி மற்றும் நகங்களை வெட்டுவது மங்களகரமானது என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். செல்வம், புகழ் இரண்டையும் பெறுவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 78

  நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

  சனிக்கிழமையன்று நகங்கள், முடி வெட்டுவதால் ஏற்படும் விளைவு : சனிக்கிழமை முடி அல்லது நகங்களை வெட்டுவதற்கு உகந்த நாள் அல்ல. இந்த நாளில் நகம் அல்லது முடி வெட்டினால், அகால மரணம் மற்றும் நிதி இழப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் முடி அல்லது சவரம் செய்வது பித்ரா தோஷத்தை ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 88

  நீண்ட ஆயுள்… உடல் ஆரோக்கியம்… முடி & நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது?

  ஞாயிறு அன்று நகங்கள், முடி வெட்டுவதால் ஏற்படும் விளைவு : ஞாயிற்றுக் கிழமை முடி வெட்டுவது நல்லதல்ல. மஹாபாரதத்தின் அனுஷனா பர்வாவில் சூரியனின் நாளில் நகங்களையும் முடியையும் வெட்டுவது செல்வம், ஞானம் மற்றும் மதத்தை அழிக்கும் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாவிட்டால், முடி மற்றும் தாடியை சவரம் செய்ய வேண்டாம்.

  MORE
  GALLERIES