ஹோலிக்குப் பிறகு அதாவது மார்ச் 12 முதல் சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை நடக்கப் போகிறது. மார்ச் 12 அன்று, சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார். அன்று காலை 08.37 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரித்து ஏற்கனவே இருக்கும் ராகுவுடன் இணைகிறார். சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை மார்ச் 12ஆம் முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை இருக்கும். பிறகு ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 11:10 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு சஞ்சரிக்கிறார். அப்போது சுக்கிரன் ராகுவின் சேர்க்கை முடியும்.
மிதுனம்: ராகுவுடன் சுக்கிரன் இணைவது மிதுன ராசிக்கு நன்மை தரும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கூடும். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் அதிர்ஷ்டத்திற்கு சாதகமாக இருப்பார்கள், இதன் காரணமாக நீங்கள் நன்மை அடைவீர்கள். நிதி வலுப்பெறும். வியாபாரத்தில் ஒரு பெரிய ஆர்டரைப் பெறலாம் அல்லது உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கான வாய்ப்பைப் பெறலாம்.மேலும் இந்த நேரம் பண விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும். முதலீடு லாபகரமாக இருக்கும். முன்பு செய்த முதலீடுகள் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். சுக்கிரன் சுகங்களை அதிகரிக்க செய்வார்.
துலாம் : சுக்கிரன், ராகு சேர்க்கை துலாம் ராசியினருக்கும் நன்மை தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். கணவன்-மனைவி இடையேயான அன்பின் பிணைப்பு வலுவாகும். உங்கள் அன்புகுரியவர்கள் நண்பர்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்துக் கொண்டு செயல்படுவீர்காள். மேலும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். வேலையை முன்னேற்ற முயற்சி செய்து வெற்றியும் அடைவீர்கள். உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். பணம் வரவு அதிகமாக கிடைக்கும்.
மீன ராசி: சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை உங்களுக்கு திடீர் நிதி ஆதாயத்தைத் தரும். அது உங்களை பணக்காரராக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் பொருளாதாரம் வலுவாக இருக்கும், இதன் காரணமாக உங்கள் வசதிகள் அதிகரிக்கும். வரவே வராது என்று இருந்த சொத்துக்கள் பணம் உங்களை தேடி வரும். அதனால் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் செல்வம் பெருகும். மேலும் உங்களின் சமூக செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகளால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். உங்களின் பணி எளிதாக நடைபெறும். இருப்பினும், நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சில் கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில், உங்கள் உணவு முறையை சரியான முறையில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் சிக்கலை ஏற்படுத்தும்.