முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » ஒரே ராசியில் 3 கிரகங்கள்.. உருவாகும் திரிகிரக யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!

ஒரே ராசியில் 3 கிரகங்கள்.. உருவாகும் திரிகிரக யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!

மார்ச் 16 ஆம் தேதி காலை 10.54 மணிக்கு புதன், மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரக மாற்றம் ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 • 16

  ஒரே ராசியில் 3 கிரகங்கள்.. உருவாகும் திரிகிரக யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!

  நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசியில் இணைந்து பயணிக்கும். கிரகங்கள் இணையும் போது தான் யோகங்கள் உருவாகும். அந்த வகையில் பிப்ரவரி 27ஆம் தேதி மாலை 04.55 மணிக்கு கும்ப ராசியில் புதன் நுழைந்தார். இவர் பிப்ரவரி 27 முதல் மார்ச் 15 வரை கும்ப ராசியில் இருப்பார். பின்னர், மார்ச் 16 ஆம் தேதி காலை 10.54 மணிக்கு புதன், மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரக மாற்றம் ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் அந்த தாக்கம் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். கும்பத்தில் உருவாகும் இந்த யோகமானது சூரியன், சனி, புதனின் சேர்க்கையால் உருவாகிறது. இந்த யோகம் திரிகிரக யோகம் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் இந்த வகை யோகம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த 5 ராசிக்காரர்கள் பெறும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். அது எந்தெந்த ராசிகாரர்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  ஒரே ராசியில் 3 கிரகங்கள்.. உருவாகும் திரிகிரக யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!

  மேஷம்: மேஷ ராசியினருக்கு திரிகிரஹ யோகம் நிதி ரீதியாக சாதகமானதாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் 11வது வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இந்த நேரத்தில் வருமானம் கூடும். புதிய வருவாய்கான வழிகளும் உருவாகும். உங்கள் சம்பளம் கூடும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பணவரத்தால் மகிழ்ச்சி கடலில் ஆழ்வீர்கள்.

  MORE
  GALLERIES

 • 36

  ஒரே ராசியில் 3 கிரகங்கள்.. உருவாகும் திரிகிரக யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!

  ரிஷபம்: ரிஷப ராசியினருக்கும் திரிகிரஹ யோகம் அமையும். உங்கள் ராசியில் கர்ம பாவத்தில் இந்த யோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் நீங்கள் வெளிநாட்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வராத பணம் வந்து சேரும். பூர்வீக சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

  MORE
  GALLERIES

 • 46

  ஒரே ராசியில் 3 கிரகங்கள்.. உருவாகும் திரிகிரக யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!

  மிதுனம் : திரிகிரஹ யோகம் மிதுன ராசிக்கு ஏற்றது. சனி உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை முடிக்க முடியும். உங்கள் உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்வீர்கள். சில வேலைகளுக்காக வெளியூர் செல்ல நேரிடலாம். அது பலனளிக்கும்.

  MORE
  GALLERIES

 • 56

  ஒரே ராசியில் 3 கிரகங்கள்.. உருவாகும் திரிகிரக யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!

  தனுசு:தனுசு ராசிக்கு திரிகிரஹ யோகம் பலன் தரும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் இருக்கிறார். உங்கள் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். உங்கள் முதலீடுகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்வீர்கள்

  MORE
  GALLERIES

 • 66

  ஒரே ராசியில் 3 கிரகங்கள்.. உருவாகும் திரிகிரக யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!

  மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரஹ யோகம் பலன் தரும். உங்கள் ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இந்த நேரத்தில் நிதி ஆதாயம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் பழகுபவர்கள் உங்கள் மீது ஈர்க்கப்படுவார்கள். வியாபாரிகளுக்கு சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் முதலாளியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

  MORE
  GALLERIES