ஜோதிடத்தில், கிரகங்களின் மாற்றம் அல்லது பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை காணலாம். கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசியினருக்கு நல்ல பலன்களையும் சிலருக்கு தீய பலன்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில் வரபோகும் ஜூன் 2ஆம் தேதி செவ்வாய் கிரகம் தனது இடத்தை மாற்றுகிறார். இதனால் எந்த ராசியினருக்கு என்ன பலன், யோகம் என்பது குரித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
செவ்வாய் கிரகம் கடின உழைப்பு, துணிச்சல், வலிமை, தைரியம் மற்றும் ஜாதகத்தில் வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஜூன் மாதm 2ஆம் தேதி தனது ராசியை மாற்றுகிறார். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்ல உள்ளார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மட்டும் குபேர யோகம் அடிக்க உள்ளது. அவர்கள் மேஷம், கும்பம், கடகம், சிம்மம் ஆவார்கள்