தலைமை அர்ச்சகர் வி.சி.ஈஸ்வர் பிரசாத்நம்பூதிரி, சந்நிதியில் உள்ள ஸ்ரீ பத்ரிநாதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்தார். பிரதமர் மோடியின் பெயரில் முதல் பூஜை நடந்தது. மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பக்தர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு சார்தாம் யாத்திரையை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளதாகக் கூறினார். (Image credit - twitter - @kedarnathdham11)
பத்ரிநாத் கோயில் வாசல் திறப்பதற்கு ஒருநாள் முன்பாகவே கோயிலில் கூட்டம் அலைமோதியது. லேசான பனிப்பொழிவு மற்றும் மழைக்கு நடுவே, இசைக் குழுவினரின் இன்னிசையும், உள்ளூர் பெண்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் பத்ரிநாத் பகவானின் துதியும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன. (Image credit - twitter - @ShriBadrinath)
சார்தாம் யாத்திரை என்றால் என்ன? உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதை ஹிந்துக்கள் முக்கியமாக கருதுகின்றனர். இது சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது. (Image credit - twitter - @AshokKumar_IPS)