வளையல் என்பது பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருள்களில் ஒன்று. ஜோதிடத்திலும் வளையளுக்கு முக்கியத்துவம் உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின் படி வளையல் சுக்கிரனுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்தால் பல அற்புதமான பலன்களை பெறுவார்கள். அந்தவகையில், வளையல் அணிவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி இங்கே நாம் காணலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக 7வது மாதத்திற்குப் பிறகு வளையல் அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. 7 வது மாதத்திற்குப் பிறகு, குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். கருவில் இருக்கும் குழந்தை வெவ்வேறு ஒலிகளை அடையாளம் காணத் தொடங்குகின்றன. இதன் சப்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டும். மேலும், இது மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்துவதால், தாய் சேய் இருவருக்கும் நன்மை பயக்கும்.
வளையல் அணியாத பெண்கள் சோர்வு மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், வளையல்களின் நேர்மறை சக்தி உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கிறது. வளையல்கள் ஒரு பெண்ணின் கணவரின் நல்வாழ்வைக் குறிக்கின்றன. அது மட்டுமல்ல. வளையல் அணிவது தம்பதியிடையே உறவை வலுப்படுத்த உதவுகிறது.